ஈசாப் நீதிக் கதைகள்/காளைகளும், இருசும்

காளை மாடுகள் ஒரு வண்டியை இழுத்துச் சென்றன. அப்போது இரு சக்கரங்களின் இருசுவானது சத்தம் எழுப்பியது. இதனால் கோபமடைந்த வண்டியை ஓட்டியவன் இறங்கி வண்டி மீது சாய்ந்து கொண்டு சத்தமாக "நீ ஏன் சத்தம் எழுப்புகிறாய்? பாரத்தை சுமப்பவர்கள் எந்த ஒரு சத்தத்தையும் எழுப்பவில்லையே!" என்றான்.


நீதி: அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவாகவே அழுகிறார்கள்.