ஈசாப் நீதிக் கதைகள்/காற்றும், சூரியனும்

காற்றுக்கும், சூரியனுக்கும் இடையில் ஒரு விவாதம் ஏற்பட்டது. இரண்டும் தாம் தான் வலிமையானவை என்று கூறின. இறுதியாக ஒரு பயணி மீது தங்களது சக்தியை உபயோகிக்க அவை முடிவு செய்தன. அப்பயணியின் மேலங்கியை யார் சீக்கிரம் உடலிலிருந்து பிரித்து விழா வைக்கிறார்கள் என்று காணலாம் என முடிவு செய்தன. காற்று முதலில் முயற்சித்தது. தாக்குதலுக்கு தனது முழு வலிமையையும் பயன்படுத்தியது. ஒரு பெரும் சூறாவளியாக மனிதனை தாக்கியது. எனினும் அவன் தனது மேலங்கியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். காற்று எந்த அளவுக்கு வேகமாக வீசியதோ அந்த அளவுக்கு இறுக்கமாக அப்பயணி மேலங்கியை தன் மீது சுற்றிக் கொண்டான். பிறகு சூரியனின் முறை வந்தது. முதலில் பயணி மீது எளிதாக சூரியன் கதிரை வீசியது. உடனேயே தனது மேலங்கியை கழட்டிய அந்த மனிதன் தனது தோள் பட்டையில் அதை போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். பிறகு சூரியன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி கதிரை வீசியது. சில அடிகளை எடுத்து வைத்ததற்கு பிறகு அவன் அந்த மேலங்கியை மகிழ்ச்சியுடன் தூக்கி எறிந்தான். பாரம் குறைந்தவனாக தனது பயணத்தை முடித்தான்.


நீதி: ஒருவனை வருத்தி ஒரு செயலை செய்ய வைப்பதை விட அன்பால் ஒரு செயலை செய்ய வைப்பது சிறந்தது.