ஈசாப் நீதிக் கதைகள்/கப்பல் மூழ்கிய மனிதன்

ஏதென்ஸைச் சேர்ந்த ஒரு செல்வந்தன் தன்னுடைய சில கூட்டாளிகளுடன் ஒரு கடல் பயணத்தை மேற்கொண்டான். ஒரு பெரும் புயல் தாக்கியதன் காரணமாக கப்பல் கவிழ்ந்தது. மற்ற அனைத்து பயணிகளும் நீந்த ஆரம்பித்தனர். ஆனால் ஏதென்ஸைச் சேர்ந்தவன் மட்டும் கடவுள் ஏதெனாவிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். தன்னைக் காப்பாற்றினால் பதிலுக்கு தான் செய்வதாக ஏராளமான உறுதி மொழிகளைக் கூறிக் கொண்டிருந்தான். அப்போது மூழ்கிய கப்பலைச் சேர்ந்த பயணிகளில் ஒருவன் அவனைத் தாண்டி நீந்திச் சென்று கொண்டே கூறியதாவது "ஏதெனாவை வழிபடும் அதே நேரத்தில் உன்னுடைய கைகளையும் அசைக்கத் தொடங்கு" என்றான்.