ஈசாப் நீதிக் கதைகள்/கப்பல் கட்டும் தளத்தில் ஈசாப்

ஒரு நாள் ஈசாப் தனக்குக் கிடைத்த ஓர் உபரி நேரத்தைச் செலவழிப்பதற்காக ஒரு கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பணியாட்கள் அவரை வம்புக்கு இழுத்தனர். அவரைப் பதிலளிக்க வைக்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினர். எனவே ஈசாப் அவர்களிடம் ஒரு கதையைக் கூறினார்:


"தொடக்கத்தில் ஒழுங்கற்ற தன்மை மற்றும் நீர் ஆகியவை மட்டுமே இருந்தன. கடவுள் சியுசு பூமி எனும் மற்றொரு பகுதியைத் தோற்றுவிக்க விரும்பினார். அதற்கு அவர் மூன்று முறை கடலை விழுங்க வேண்டியிருந்தது. பூமியைச் செயல்பட வைப்பதற்காக அவர் ஒரு முறை கடலை விழுங்கினார். இதன் விளைவாக மலைகள் உருவாயின. பிறகு இரண்டாவது முறை கடலை விழுங்கினார். சமவெளிகள் உருவாயின. அவர் கடலை மூன்றாவது முறை விழுங்க முடிவு செய்தால் உங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்".


நீதி: உன்னை விட புத்திசாலியை இகழ முயற்சித்தால் புத்திசாலியின் பதில் உன் இகழ்ச்சியை விடப் பலமானதாக இருக்கும்.