ஈசாப் நீதிக் கதைகள்/ஏதேனியக் கடனாளி

ஏதென்ஸில் ஒரு கடனாளியை அவருக்குக் கடன் கொடுத்தவர் கடனைச் செலுத்துமாறு கூறுவதற்காக வரவழைத்தார். தன் நிலைமை மிக மோசமாக இருப்பதால் சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு கடனாளி மன்றாடினர். தனக்குக் கடன் கொடுத்தவரை இணங்க வைக்க இயலாததால் தான் சொந்தமாக வைத்திருந்த ஒரே ஒரு பெண் பன்றியைக் கடன் கொடுத்தவருக்கு முன்னாலேயே விற்பதற்குக் கடனாளி ஆரம்பித்தார். அந்தப் பன்றியை வாங்க அங்கு ஒருவர் வந்தார். "பெண் பன்றி குட்டிகளை ஈனுமா?" என்று அவர் கேட்டார்.


"இது ஆச்சரியத்தக்க வகையிலே குட்டிகளை ஈனும்" என்று கடனாளி கூறினார். "சில காலங்களில் பெண் குட்டிகளை மட்டுமே ஈனும், மற்ற சில காலங்களில் ஆண் குட்டிகளை மட்டுமே ஈனும்" என்று கூறினார்.


இதை அறிந்த பன்றியை வாங்க வந்தவர் ஆச்சரியமடைந்தார். அதே நேரத்தில் கடன் கொடுத்தவரும் தன் பங்குக்கு "நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் ஆச்சரியம் அடைந்திருக்க மாட்டேன். ஏனெனில், கடவுள் தியோனைசியசுக்கு இந்தப் பன்றி ஆட்டுக் குட்டிகளை கூட ஈனும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்றார்.


நீதி: மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், நடக்க இயலாததற்கும் உறுதி வழங்குவதற்குத் தயங்க மாட்டார்கள்.