ஈசாப் நீதிக் கதைகள்/உழவனும், ஓநாயும்

ஓர் உழவன் தன்னுடைய கலப்பையில் இருந்து காளை மாடுகளை அவிழ்த்தான். அவை தண்ணீர் குடிப்பதற்காக ஓட்டிச் சென்றான். அவன் இல்லாத நேரத்தில் ஒரு பசியுடைய ஓநாய் அங்கு வந்தது. கலப்பையை நோக்கிச் சென்றது. நுகத்தடியில் மாடுகளின் கழுத்தில் கட்டப்படுவதற்காக இருந்த தோல் பட்டைகளை மெல்ல ஆரம்பித்தது. தன் பசிக்கு உணவாவதற்காக அது வேகமாக உண்ண ஆரம்பித்தது. அப்போது அதன் கழுத்தின் மேல் நுகத்தடி மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அது முயன்றது. பிறகு நிலத்தில் கலப்பையை இழுத்துக் கொண்டு நகர்ந்தது. அந்நேரத்தில் உழவன் அங்கு வந்தான். அங்கு நடப்பதைக் கண்ட அவன் "உன்னுடைய திருட்டு தொழிலை விட்டு விட்டு அதற்கு பதிலாக ஒரு நேர்மையான தொழிலை செய்வாய் என நான் எதிர்பார்க்கிறேன்" என்றான்.


நீதி: ஒழுக்கக் கேடானவர்கள் நன்னடத்தையுடன் செயல்படுவேன் என்று உறுதி அளித்தாலும் அவர்களது தீய பழக்க வழக்கங்கள் காரணமாக யாரும் அவர்களை நம்புவதில்லை.