ஈசாப் நீதிக் கதைகள்/உதவிக்குப் பலன்

குளிர் காலத்தில் ஒருநாள் ஒரு பாம்பு பனியில் விரைந்து சுருண்டு கிடந்தது. அதன் உயிர் போய்விடுமோ என்ற நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியனவன் ஒருவன் இதனைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அவன் அப்பாம்புக்கு உதவிட நினைத்தான். பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான். பாம்பைப் பார்த்து " ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்றான்.


[ தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்]