ஈசாப் நீதிக் கதைகள்/இரண்டு தவளைகள்

இரு தவளைகள் ஒன்றாக ஒரு சதுப்பு நிலத்தில் வாசித்தன. ஆனால் ஒரு கடுமையான கோடை காலத்தில் சதுப்பு நிலமானது வறண்டது. அவை தாம் வாழ்வதற்கென மற்றொரு இடத்தை தேடி சென்றன. தங்களுக்கு கிடைத்தால் ஈரமான பகுதிகளை தவளைகள் விரும்பும். இவ்வாறாக பயணித்த போது அவை ஓர் ஆழமான கிணற்றை கண்டன. ஒரு தவளை அக்கிணற்றை உற்றுப் பார்த்தது. மற்றொரு தவளையிடம் அது "இந்த இடம் ஒரு மிதமான குளிர்ந்த இடமாக தோன்றுகிறது. நாம் இதனுள் தாவி இங்கு வசிக்கலாம்" என்றது. ஆனால் புத்திசாலியான மற்றொரு தவளை பதிலளித்ததாவது "அவசரப்படாதே நண்பா, சதுப்பு நிலத்தைப் போல் இந்த கிணறும் வறண்டு போனால் இதிலிருந்து நாம் வெளி வருவது எவ்வாறு?" என்றது.


நீதி: எண்ணித் துணிக கருமம்.