இறகுப்பந்தாட்டம்/கள அளவுகள்

களம் நீள் சதுரம் ஆகும். இது இரண்டு பக்கங்களாக ஐந்து அடி உயரமுள்ள வலையால் பிரிக்கப்பட்டு இருக்கும். பொதுவாக ஒற்றை அல்லது இரட்டை ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி களம் படம் 1 இல் காட்டப் பட்ட மாதிரி பச்சைக் கோடுகளால் குறிக்கப்பட்டு இருக்கும்.

படம் 1

ஒற்றையர் விளையாட்டு தொகு

ஒற்றை விளையாட்டில் அகலம் குறைவானதாகும். அகல எல்லை உள் நீள் கோடு ஆகும்.

இரட்டையர் விளையாட்டு தொகு

இரட்டை விளையாட்டில் அகலம் நீண்டதாகும். ஆனால் பரிமாறும் (serve) போது உள் எதிர் பெட்டியின் நீள எல்லை சிறிதனாதாகும்.

அளவுகள் தொகு

களம் ஒரு நீள் சதுரம் ஆகும். களத்தின் முழு அகலம் 6.1 மீட்டர். ஒற்றையர் விளையாட்டின் போது இந்த அகலம் 5.18 மீ ஆக குறைக்கப்படுகிறது. களத்தின் முழு நீளம் 6.1 மீ. இக் களம் 1.55 மீட்டர் உயரமான வலையால் நீள் சதுரம் பிரிக்கப்பட்டு இருக்கும்.

இக் களம் ஒவ்வொரு பக்கமும் பரிமாறும் களங்களைக் (Service Courts) குறிக்கும் வண்ணம் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பக்கமும் இரு பரிமாறும் களங்கள் நடுவிலே ஒரு கோட்டினால் பிரிக்கப்பட்டு இருக்கும். வலையில் இருந்து 1.98 மீ தூரத்தில் ஒரு கோடு போடப்பட்டு இருக்கும். பரிமாறும் போது இறகு வலையில் இருந்து அக் கோட்டுக்குள் விழுந்தால் அது செல்லுபடியாகாது. பின் எல்லைக் கோட்டி இருந்து 0.78 மீ தூரத்தில் கோடு போடப்பட்டு இருக்கும். இது இரட்டையர் ஆட்டத்தின் போது பரிமாறும் எல்லையாகப் பயன்படுகிறது.