அடக்கம் உடைமை
திருக்குறள் > இல்லறவியல்
- 121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
- ஆரிருள் உய்த்து விடும்.
- அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.
- ஆரிருள் உய்த்து விடும்.
- 122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
- அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
- ஒருவருக்கு அடக்கத்தைவிட அவரின் உயிர்க்குக் காவலாய் அமைவது வேறெதுவுமில்லை.
- அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
- 123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
- ஆற்றின் அடங்கப் பெறின்.
- ஒருவர் அறிவாற்றலுடன் அடக்கமுடனும் நடந்துகொள்வானாயின் அதுவே அவனுக்குப் பெருமையளிக்கும்
- ஆற்றின் அடங்கப் பெறின்.
- 124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
- மலையினும் மாணப் பெரிது.
- தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனே மலையைக் காட்டிலும் பெரியவனாய் கருதப்படுவான்.
- மலையினும் மாணப் பெரிது.
- 125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
- செல்வர்க்கே செல்வம் தகைத்து.
- பணிவு என்பது எல்லார்க்கும் நன்மையேயாயினும் செல்வந்தர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாகக் கருதப்படும்.
- செல்வர்க்கே செல்வம் தகைத்து.
- 126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
- எழுமையும் ஏமாப் புடைத்து.
- ஒரு பிறவியில் ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கினால் அது அவனுக்கு ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பளிக்கும்
- எழுமையும் ஏமாப் புடைத்து.
- 127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
- சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
- ஒருவன் தன் நாக்கை அடக்காவிட்டால் அதுவே அவனுக்குத் தீராதப் பழியை உண்டாக்கி விடும்
- சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
- 128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
- நன்றாகா தாகி விடும்.
- ஒரே ஒரு தீயசொல்லினால் அப்போது பொருட்பயன் கிட்டுவது போலிருந்தாலும் அதனால் விளையப்போகும் நன்மை ஒன்றுமில்லை
- நன்றாகா தாகி விடும்.
- 129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
- நாவினாற் சுட்ட வடு.
- ஒருவரைத் தீயினால் சுட்டாலும் அது காலப்போக்கில் ஆறிவிடும், ஆனால் அவரின் மனம் புண்படும்படி பேசியது என்றும் ஆறாத்தழும்பாய் இருந்து வருத்தும்.
- நாவினாற் சுட்ட வடு.
- 130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
- அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
- தன் சினத்தை காத்து, கல்வி கற்று, அடக்கத்துடனும் நடப்பவனை அவன் வழியிலே சென்று அறக்கடவுள் அவனைத் தகுந்த காலத்தில் பார்க்கும்
- அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
« முன் பக்கம்: விருந்தோம்பல் | திருக்குறள் » இல்லறவியல் » இனியவை கூறல் | அடுத்த பக்கம்: செய்ந்நன்றி அறிதல் »