9-வது திருமொழி - என்னாதன்
--வெ.ராமன் 08:33, 17 ஏப்ரில் 2006 (UTC)
கிருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணங்களை இரண்டு கோபியர் எதிரெதிராகக் கூறி உந்திபறித்தல் கலித்தாழிசை என்னாதன் தேவிக்குஅன்று இன்பப்பூ ஈயாதாள் தன்* நாதன் காணவே தண்பூ மரத்தினை* வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட* என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான் வன்மையைப் பாடிப்பற. 1 என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான் தன்* வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி* முன்வில் வலித்து முதுபெண்ணு யிருண்டான் தன்* வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் படிப்பற. 2 உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு* விருப்புற் றங்கேக விரைந்து எதிர்வந்து* செருக்குற்றான் வீரம் சிதைய* தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற. 3 மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட* ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்றுஅழ* கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம் போன* சீற்ற மிலாதானைப் பாடிப்பற சீதைமணாளனைப் பாடிப்பற. 4 பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து* நஞ்சுமிழ் நாகம் கிடந்த நல்பொய்கை புக்கு* அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த* அஞ்சனவண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. 5 முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு* உன் அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த* படியில் குணத்துப் பரதநம்பிக்கு* அன்று அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. 6 காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு* அவன் நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து* மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்* தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற. 7 தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து* தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி* நுடங்கிடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு* அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற. 8 மாயச் சகட முதைத்து மருதிறுத்து* ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து*அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற* ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற. 9 காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு* ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்* நேரா அவன்தம்பிக்கே நீளரசீந்த* ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. 10 தரவு கொச்சகக்கலிப்பா நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று* உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்* செந்தமிழ்த் தென்புதுவை விட்டு சித்தன்சொல்* ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே. 11 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்