7-வது திருமொழி - ஐயபுழுதி
--வெ.ராமன் 07:30, 14 ஏப்ரில் 2006 (UTC)
மாலின்மேல் மகள் மாலுறுகின்ற கோலம் தாயவள் கூறல்
தொகுகலிநிலைத்துறை ஐயபுழுதி உடம்பளைந்து இவள்பேச்சு மலந்தலையாய்* செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்* கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்* பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே. 1 வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூடிற்றில* சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி* தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி* மாயன் மாமணிவண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே. 2 பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்* சங்கு சக்கரம் தண்டுவாள் வில்லுமல்லது இழைக்கலுறால்* கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை* சங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே. 3 ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்பெண்மகளை யெள்கி* தோழிமார் பலர்கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியையார்க் குரைக்கேன்?* ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி* மூழையுப் பறியாத தென்னும் மூதுரையு மிலளே. 4 நாடும் ஊரும் அறியவேபோய் நல்ல துழாயலங்கள்* சூடி நாரணன் போமிடமெல்லாம் சோதித்துழி தருகின்றாள்* கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளை* பாடு காவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5 பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்பாடகமும் சிலம்பும்* இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்* பொட்டப் போய்ப்புறப்பட்டு நின்று இவள் பூவைப் பூவண்ணா வென்னும்* வட்டவார் குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே. 6 பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள்* கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல்கழிந்தான் மூழையாய்* கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுகவாய் மொழியாள்* வாசவார்குழல் மங்கைமீர்! இவள் மாலுறுகின்றாளே. 7 காறை பூணும் கண்ணாடி காணும் தன்கையில் வளைகுலுக்கும்* கூறை யுடுக்கும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்தேவன் திறம்பிதற்றும்* மாறில் மாமணி வண்ணன்மேல் இவள் மாலுறுகின்றாளே. 8 கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை* வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணியம்? நம்மை வடுப்படுத்தும்* செய்த்தலை யெழுநாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள* மைத்தட முகில்வண்ணன் பக்கல் வளரவிடுமின்களே. 9 பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம்மில்லத்துள்ளே* இருத்து வானெண்ணி நாமிருக்க இவளும் ஒன்றெண்ணுகின்றாள்* மருத்துவப் பதம்நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன்* ஒருப்படுத் திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே. 10 ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் நாராயணனுக்கு* இவள் மாலதாகி மகிழ்ந்தனளென்று தாயுரை செய்ததனை* கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன* மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. 11 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்