நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/10ம் திருமொழி
(10ம் திருமொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
--வெ.ராமன் 07:59, 23 ஜூலை 2006 (UTC)
தில்லைநகர்த் திருசித்திரகூட மால் இராமனாய் தோன்றிய காதை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி* வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை* செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே 1 வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி* மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்* செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* அந்தணர்க ளொருமூவா யிரவர் ஏத்த அணிமணியா சனத்திருந்த அம்மான் தானே. 2 செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி* வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை* தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. 3 தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை* பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து* சித்திரகூ டத்திருந்தான் தன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே. 4 வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி* கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்த னுயிரை வாங்கி* சிலைவணக்கி மான்மரிய வெய்தான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே. 5 தனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி* வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்* சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே. 6 குரைகடலை அடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேறி* எரிநெடுவே லரக்கரொடும் இலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து* திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* அரசமர்ந்தான் அடிசூடும் அரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே. 7 அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்* தன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்* செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே. 8 செறிதவச்சம் புகன்தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோன் ஈந்த* நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் தன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட* திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* உறைவானை மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயரம் அடையோம் இன்றே. 9 சாற்றுப்பாட்டுக்கள் அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை வென்று*இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி* சென்றினிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* என்றும்நின்றான் அவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர்! நீரே. 10 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை* எல்லையில்சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று அதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா* கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரன்சொற் செய்த* நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. 11 குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்