வெகுளாமை
|
திருக்குறள் > துறவறவியல்
- 301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச்
- காக்கின்என் காவாக்கால் என்?
- 302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
- இல்அதனின் தீய பிற.
- 303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
- பிறத்தல் அதனான் வரும்.
- 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
- பகையும் உளவோ பிற.
- 305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
- தன்னையே கொல்லுஞ் சினம்.
- 306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
- ஏமப் புணையைச் சுடும்.
- 307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
- நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
- 308. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
- புணரின் வெகுளாமை நன்று.
- 309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
- உள்ளான் வெகுளி எனின்.
- 310. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
- துறந்தார் துறந்தார் துணை.