வீரராக்கியம் ஏரி
வீரராக்கியம் ஏரி
தொகுஅமைவிடம்
தொகு-
வீரராக்கியம் ஏரி, வளையல்காரன்புதூர் குளம், இரண்டிற்குமிடையேயான நீர்ப்பாதை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பாலராஜபுரம் கிராமத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரூர் திருச்சி புறவழிச்சாலை இந்த ஏரியின் கரையை ஒட்டிச் செல்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.
நான்கு எல்லைகள்
தொகுஏரியின் வடக்கு மற்றும் மேற்கு கரையில் தேசிய நெடுஞ்சாலையும், கிழக்கு கரையில் வீரராக்கியம் ஊரும், தென்கரையில் குளத்துப்பாளையம் கிராம விவசாய நிலங்களும் உள்ளன. ,இந்த எல்லைகளுக்கு இடையே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்த ஏரி.
நீர்பிடிப்பு பகுதிகள்
தொகுஉப்பிடமங்கலம் மற்றும் அதற்கு மேற்கில் உள்ள காட்டுப்பகுதிகளிலும், குளத்துப்பாளையம், காளிபாளையம் போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீர் சிறு சிறு காட்டு வாய்க்கால்கள் மூலமாக இந்த ஏரியை வந்தடைகிறது. உப்பிடமங்கலம் குளம் நிரம்பும் போது வெளியேறக் கூடிய உபரிநீர் இந்த ஏரிக்கு வருவதற்கும் நீர் வழிகள் உள்ளன, == பாசன வசதி பெறும் பகுதிகள் == வீராராக்கியம், வளையல்காரன் புதூர் பகுதியைச் சார்ந்த நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும் வகையில் வாய்க்கால் வசதிகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளின் நீர் மட்டம் உயர இந்த ஏரியும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த ஏரியின் உபரி நீர் அருகிலுள்ள வளையல்காரன் புதூர் குளத்திற்கு செல்லும் வகையில் நீர்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடிகால் வசதி
தொகுஇந்த ஏரியின் உபரி நீர் கட்டளை வழியாக நேரடியாக காவிரி ஆற்றில் சென்று கலக்கும் வண்ணம் வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களைப் பயன்படுத்தி காவிரி ஆற்றின் நீரைக் கொண்டு வந்து இந்த ஏரியை நிரப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதையை நிலை
தொகுதமிழகம் முழுவதும் நிலவும் வறட்சி ,இப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. ஏரியின் உட்பகுதிகளில் மட்டும் சிறிதளவு நீர் சேறும் சகதியுமாக உள்ளது. தற்போது அரசு உத்தரவின் அடிப்படையில் தூர் வாரப்பட்டுவருகிறது. வாரப்படும் மண் அருகிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவருகிறது.