விக்கிநூல்கள்:பிற விக்கிமீடியா திட்டங்களுக்கான வாக்கெடுப்பு

தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் பலரும் தொடர்ந்து பண்டைத் தமிழ் நூல்களை சேர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. எனினும், தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் அனைவரும் தொகுத்து திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றை உருவாக்குவதையே முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கிறோம். எனவே பண்டை தமிழ் இலக்கியங்களை இந்த தளத்தில் சேர்ப்பது பொருத்தமாக இராது. இது போன்ற தமிழ் இலக்கியச் சேகரிப்புகளை செய்ய தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட இருக்கிறது. அத்தளம் தொடங்கப்பட்டவுடன், இங்கு நீங்கள் செய்து வரும் தொகுப்புகளை அங்கு தொடரலாம். அது வரை இங்கு தமிழ் இலக்கிய நூல்களை சேர்ப்பதை நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது, அவற்றை தட்டச்சு செய்து உங்கள் கணினியில் சேர்த்து வைத்திருப்பீர்களானால், பிறகு தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட்டவுடன், அங்கு விரைந்து சேர்க்கலாம். ஏற்கனவே, இங்கு பதியப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டவுடன் அங்கு நகர்த்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க.

விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !


  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
  • தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.

வாக்களிப்பு முறை:

மேற்கண்ட வாக்களிப்புப் பக்கங்களில் உங்கள் பெயர்களையும் ஊரையும் மட்டும் பதிப்பது செல்லாத வாக்காகவே போகும். உங்கள் வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால், மேற்கண்ட தளங்களில் முதலில் பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்து, உங்கள் வாக்கை செலுத்த ~~~~ என்ற குறியை வாக்குப் பட்டியலின் இறுதியில் சேருங்கள்.


மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.

நன்றி--Ravidreams 09:13, 4 ஆகஸ்ட் 2006 (UTC)