விக்கிநூல்கள்:நடைக் கையேடு

விக்கிநூல்கள் நடைக் கையேடு ஒரு விக்கிநூலை உருவாக்கப் பயன்படும் நூல் கட்டமைப்பையும் மொழி நடையையும் விபரிக்கும். விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் போன்று விக்கிநூல்களுக்கும் தனித்துவமான கட்டமைப்பும் மொழி நடையும் உண்டு. விக்கிநூல்களுக்கு அச்சு நூல்கள் போலன்றி இடம் ஒரு பொருட்டு அல்ல. இணைப்புகளை, நிகழ்படங்களை, ஒலிக்கோப்புக்களை இலகுவாக இணைத்துக் கொள்ளலாம். இலகுவாக இற்றைப்படுத்திக் கொள்ளலாம். அதே வேளை அச்சு நூல் போன்றே பொருளடக்கம், அதிகாரங்கள், உசாத்துணைகள், சொல்லடைவுகள் போன்ற பகுதிகள் இருக்கும்.

பெயரிடல்

தொகு

ஒரு விக்கிநூலின் இலக்கு வாசகர்கள், விடயப் பரப்பு, ஆழம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் தலைப்பு அமைதல் வேண்டும். ஒரே துறையில் வெவ்வேறு வாசகர்களுக்கான (எ.கா மாணவர்களுக்கானதும், வல்லுனர்களுக்கானதும்) அல்லது வெவ்வேறு ஆழம் அல்லது பரப்புக் கொண்ட நூல்கள் உருவாக்கப்படலாம். எ.கா கணிதத் துறையில் வணிகக் கணிதம் என்றும், கல்லூரி மாணவர்களுக்கான இயற்கணிதம் என்றும் வெவ்வேறு நூற்களை உருவாக்கலாம்.

நூலமைப்பு

தொகு

முகப்புப் பக்கம்

தொகு

ஒரு நூலின் முகப்புப் பக்கமே பொதுவாக வாசகர் முதலில் பார்க்கும் பாக்கம். இங்கு சுருக்கமாக நூலின் துறை என்ன, பரப்பு என்ன, யாருக்கானது என்பதை விபரிக்க வேண்டும். பொருடளக்கத்தையும், அச்சுக்குத் தகுந்த வடிவங்களையும் வழங்குதல் வெண்டும்.

பொருளடக்கம்

தொகு

முகப்புப் பக்கத்தில் பொருளடக்கத்தை வழங்குதல் வேண்டும்.

அறிமுகம்

தொகு

நூலின் அறிமுகப் பக்கமே நூலின் முதற் பக்கம். நூலின் நோக்கம், இலக்குகள், துறை, பரப்பு, இலக்கு வாசகர்கள் அறிமுகத்தில் தெளிவுபடுத்தலாம். இந்த நூலின் பயன்பாட்டை, கற்பதன் பலங்களை குறிப்பிடலாம். நூலின் துறை அல்லது தலைப்பு பற்றி ஒரு பொது அறிமுகத்தை வழங்கலாம். இதனை தலைப்பைப் பற்றிய பின்புலத்தை அல்லது வரலாற்றை விபரிப்பதன் மூலம் வழங்கலாம். நூலின் அதிகாரங்களைப் பற்றிய சுருக்கங்களை வழங்கலாம். நூலின் பயன்படுத்தப்படும் நெறிமுறைகளை விளக்கலாம்.

வழிகாட்டி

தொகு

வழிகாட்டி (navigation) என்பது நூலின் பக்கங்களுக்கு இடையே முன்னும் பின்னும் நகர்வதற்கு உதவியாக இடப்படும் இணைப்புகள் ஆகும். சாய்வுக்கோட்டு நெறிமுறை வழிகாட்டிகளை தானாக உருவாக்கும். வார்ப்புருக்களைப் பயன்படுத்தியும் வழிகாட்டிகளை உருவாக்கலாம்.

உசாத்துணை

தொகு

இயன்றவரை நூலின் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் உசாத்துணைகளை வழங்கல் வேண்டும். குறிபாக பிற நூற்களில் இருந்து பெறப்படும் தகவல்களுக்கு உசாத்துணைப் பகுதியில் மேற்கோள் தரப்படவேண்டும்.

சொல்லடைவு/கலைச்சொற்கள்

தொகு

ஒரு சொல்லில் பயன்படுத்தப்பட்ட துறைசார் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றின் விளக்கத்தைத் தொகுத்துத் தருவது சொல்லடைவு ஆகும். பயன்படுத்தப்பட தமிழ் கலைச்சொற்களின் பட்டியலையும் அவற்றுக்கான ஆங்கில அல்லது பிற மொழிச் சொற்களையும் பட்டியலிட்டும் தரலாம்.

பிற்சேர்ப்புகள்

தொகு

நூலின் ஓட்டத்தோடு முழுமையாக இணையாத மேலதிக தகவல்களை பிற்சேர்ப்புகளாக தரலாம்.