விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 30

படிமம்:புதிய விக்கி சின்னம் 3.png

செப்டம்பர் 30: பொட்சுவானா - விடுதலை நாள்(1966); சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.

  • 1840 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
  • 1949 - சோவியத் ஒன்றியத்தின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்பட்டது.
  • 1965 - இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
  • 2003 - தமிழ் விக்கிப்பீடியா (படம்) ஆரம்பிக்கப்பட்டது.
  • 2005 - முகம்மது நபிகளை அவமதிக்கும் வகையில் டனிஷ் செய்திதாளில் படங்கள் வெளியிடப்பட்டன.