வானவில் நாவல்
== '''''வானவில் நாவலின் போர்ச்சூழல் (எம்ஃபில் - ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு)''''''''
==
ஆய்வாளர் ஜா. மதீனா, பெரியார்பல்கலைக்கழகம்,சேலம். நெறியாளர் முனைவர். ஜ. பிரேமலதா,தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் - 636 007
1.0.முன்னுரை
தொகுமுத்தமிழ் என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம் பல்வேறு வடிவம் கொண்டுள்ளது. செய்யுள், உரைநடை என்னும் தமிழின் இரு பெரும் பிரிவுகளுள் உரைநடையானது சிறுகதை, புதினம், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பலவிதமாக வடிவெடுத்துள்ளது. இவற்றுள் புதினம், உலகனைத்தும் ஏற்று, போற்றும் இலக்கிய வடிவம் இன்றைய தமிழகத்தில் புதின இலக்கியம் நன்கு வளர்ந்து வருகிறது. இலக்கியங்களில் கற்பனை மிகுந்த, வேகமான வளர்ச்சியைக் காட்டுவது புதினம். மாறிவரும் இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்ப மக்களின் மனதோடு ஒன்றிவரும் இலக்கியம் புதினமாகும். இப்புதினம் சமூக நிலையை அவலங்களை வெளிப்படுத்துவதுடன் மனித மனங்களின் நிலைகளையும் எடுத்து இயம்புகின்றன.மனித மனங்களை, வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் புதினங்கள் வெளிவருகின்றன. இன்றிய புதினங்கள், நடப்பியல் நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாகக் கொண்டு அமைவதால், சமுதாயத்தில் நீங்காத இடம் பெறுகின்றன. மனிதனின் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் புதினங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. மனித மனங்களை கவரும் மனித நிகழ்வு கவர்ந்த நிகழ்வுகள் இப்புதினங்களில் இடம் பெறுகின்றன. சமூக மக்களின் வாழ்க்கைமுறையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் புதினங்கள் வெளிவருகின்றன. இன்றையப் புதினங்கள், நடப்பியல் நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாகக் கொண்டு அமைவதால், சமுதாயத்தில் நீங்காத இடம் பெறுகின்றன. மனிதனின் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் புதினங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இக்காலச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக புதினங்கள் அமைகின்றன.
1.2.ஆய்வின் தலைப்பு
தொகுவானவில் நாவலின் போர்ச்சூழல் என்பதே இந்த ஆய்வின் தலைப்பாகும்.
1.3.ஆய்வின் நோக்கம்
தொகுஉலக இலக்கிய வரலாற்றில் இரஷ்ய இலக்கியங்களுக்கு என தனி இடமுண்டு. அதற்கு முக்கிய காரணம் இரஷ்ய இலக்கியங்கள் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அமைந்திருப்பதே காரணமாகும். அவ்வகையில் """"வானவில்"" என்னும் இந்நாவலில், மக்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அப்படியே உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தின் நிலையை எடுத்துக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
1.4.ஆய்வின் எல்லை
தொகுவானவில் என்னும் புதினம் மட்டுமே ஆய்வு எல்லையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
1.5.ஆய்வின் கருதுகோள்
தொகுபோர் தேவையா தேவையில்லையா என்பது பற்றிய கருத்தியலை வானவில் நாவலின் வழி ஆராய்வதே கருதுகோள் ஆகும்.
''1.6.ஆய்வு அணுகுமுறை
தொகுபுதினத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளை வகைப்படுத்திக் காட்டுவதற்காகப் பகுப்புமுறை ஆய்வும், நிகழ்ச்சிகளை விளக்குவதற்காக விளக்க முறை ஆய்வும் சமுதாய நிகழ்வுகளை உணர்த்துவதற்காகச் சமூகம் பற்றி சமூகவியல் ஆய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1.7.ஆய்வு மூலங்கள்
தொகுஇந்த ஆய்விற்கு முதன்மைச் சான்றாதாரமாக விளங்குவது ‘வானவில்’ என்ற புதினம். மேலும், புதினம் பற்றிய பிற நூல்கள், இலக்கிய நுhல்கள், புதினம் பற்றிய ஆய்வேடுகள் ஆகியவை துணை ஆதாரங்களாக அமைகின்றன.
1.7.1.முதன்மை ஆதாரம்
தொகுவாண்டா வாஸிலெவ்ஸ்கா அவர்கள் எழுதியுள்ள ‘வானவில்’ புதினம் மட்டுமே இந்த ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக அமைந்துள்ளது.
1.7.2.துணைமை ஆதாரம்
தொகுநாவல் பற்றிய திறனாய்வு நுhல்கள், இலக்கியத் திறனாய்வு நுhல்கள், ஆய்வேடுகள், ஆய்விற்குத் துணைபுரிந்த ஏனைய நுhல்கள் துணைமை ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. == 1.8.ஆய்வேட்டின் அமைப்பு ==
இவ்வாய்வேடு ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
- இயல் - 1 முன்னுரை ==
- இயல் - 2 வானவில் நாவலின் கதையமைப்பு
- இயல் - 3 பாத்திரப் படைப்பு
- இயல் - 4 வானவில் சித்தரிக்கும் போர்ச்சூழல்
- இயல் - 5 வானவில் நாவலின் கட்டமைப்பு
- இயல் - 6 முடிவுரை
1.9.இயல் பகுப்பு
தொகுமுதலாம்இயல்
தொகுமுதலாம் இயலில் முன்னுரையில் ஆய்வின் நோக்கம், ஆய்வின் எல்லை, ஆய்வு அணுகுமுறை, ஆய்வு மூலங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன.
இரண்டாம் இயல்
தொகுவானவில் நாவலின் கதையமைப்பு கூறப்பட்டுள்ளன. வானவில் என்னும் புதினம் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலை இரஷ்யா எதிர்கொண்ட விதம் பற்றிக் கூறுவது வானவில் புதினம் ஆகும். உலக இலக்கிய வரலாற்றில், இரஷ்ய நாட்டு இலக்கியத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டும் கருவியாக அவ்விலக்கியம் செயல்படுவதுதான் அதன் சிறப்பு. யுத்த காலத்திலே உலகத்திலேயே வெளி வந்த நுhல்களில் தலைசிறந்தது வானவில் என்னும் புதினம். இப்புதினம் ஸ்டாலின் விருதினைப் பெற்றுள்ளது.
"வாண்டா வாஸிலெவ்ஸ்கா" எனும் ருஷ்ய போலீஸ் பெண் எழுத்தாளரே வானவில் எனும் தலைப்பில் அமைந்த இந்த நாவலைப் படைத்தவர் ஆவார். ஊடலில் ஓடுகின்ற இரத்தத்தை உறையச் செய்யும் குளிரில் நடந்த இருதயத்தை நடுங்கச் செய்யும் போர் நிகழ்வுகளைத் தத்ரூபமாக மிடுக்கான தமிழ் நடையில் ஓடவிட்டு வாசகர்களை இழுத்துப் பிடித்துப் பறக்க வைக்கும் அளவுக்கு இந்நாவலை மொழிப்பெயர்த்தவர்கள் ருஷ்ய மொழிப்பெயர்ப்புகளில் தேர்ந்த அந்நாளைய மொழிப்பெயர்ப்பாளர்களான ஆர். ராமநாதன், ஆர். எச். நாதன் ஆகிய இருவருமே ஆவர். தமிழில் இந்நாவலை பெரும்பாலானோர் விரும்பிப் படிக்கக் காரணம் அவர்களுடைய சரளமான மொழிப்பெயர்ப்பே காரணம் ஆகும்.‘வானவில்’ என்னும் கதையானது கிராம சோவியத் என்னும் இரஷ்ய நாட்டின் கிராம மக்கள் ஜெர்மானியரின் தாக்குதல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொள்கிறது. ஓலினா என்னும் பெண்ணை அவர்கள் சித்திரவதைச் செய்கின்றனர்.
தங்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஜெர்மானியர்கள் கொல்லுகின்றனர். அவர்களை எவராலும் தடுக்க முடியவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஜெர்மானியர்களைச் சபிக்கின்றனர். பின்பு ஒரு கட்டத்தில் செம்படையினர் வந்து ஜெர்மானியர்களை வென்று கிராமத்தை மீட்பதாகக் கதை முடிகிறது.
மூன்றாம் இயல்
தொகுமூன்றாம் இயல் பாத்திரப் படைப்பு ஆகும். இதில் முதன்மைப் பாத்திரப்படைப்பு, துணைப் பாத்திரப் படைப்பு, எதிர்நிலை பாத்திரப்படைப்பு பற்றி இவ்வியலில் ஆராயப்படுகிறது. வாண்டாவாஸிலெவ்ஸ்காவின் வானவில் புதினத்தின் பாத்திரங்களை முதன்மைப் பாத்திரங்கள்-துணைப் பாத்திரங்கள்-எதிர்நிலைப் பாத்திரங்கள்- பிற மாந்தர்கள் என பகுக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைப் பாத்திரங்கள் 1. பெடோஸ்யா கிராவ்சக் 2. ஒலினா கோஸ்ட்யுக் 3. மல்யுச்சிக்கா 4. மாலாஷா
துணைமைப் பாத்திரங்கள்
1. வாஸ்யா
2. ஓல்கா பலான்சக்
3. எவ்டோக்கிம்
4. குரோக்காஷ்
5. செக்கோரிக்கா
எதிர்நிலைப் பாத்திரங்கள்
1. ஜெர்மன் தளபதி குர்ட் வெர்னர் 2. புஸ்ஸி
பிற மாந்தர்கள்
1. மிஷ்கா 2. ஸாஷா 3. ஸினா 4. லிவான்யுச்சிக்கா 5. குரோக் காஷ் மனைவி 6. உபாத்தியாயினி 7. ஸெர்யோஷா 8. காப்ளிக் கிராம அதிகாரி 9. நொண்டி அலெக்சாண்டர் 10. டெர்பிலிக்கா 11. ப்ரோஸ்யா 12. கோர்பினா 13. பன்யுச்சிக்கா 14. பெல்சாரிக்கா 15. மிட்யா 16. இளம் மருத்துவன் 17. ஜெர்மன் சார்ஜண்ட் 18. ஜெர்மன் சிப்பாய்கள் 19. செம்படை வீரர்கள் 20. ஐவான்
நான்காம் இயல்
தொகுநான்காம் இயலான வானவில் சித்தரிக்கும் போர்ச்சூழல், இதில் போரில் மக்கள் அடைந்த அவல நிலையையும், அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் குறித்து ஆராயப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் கி.பி.1939-1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகில் இருந்த பெரிய வல்லரசுகள், நேச நாடுகள், மற்றும் அச்சு நாடுகள் என இரு எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன. முதல் உலகப் போருக்கு ஜெர்மனிதான் காரணம் என்பதை உலக நாடுகள் உணர்ந்து, ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டன. 1941ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் நாள் இரஷ்யாவுடன் செய்து கொண்ட போர்த் தொடுக்காத ஒப்பந்தத்தை மீறி உ ஹி ட்லர் இரஷ்யா மீது படையெடுத்தார். ஹிட்லர் ரஷ்யா மீது போர்த் தொடுக்கும்போது அங்கு குளிர்காலம். இதனால் ஹிட்லரின் படை வீரர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், இரஷ்யர்கள் பின்பற்றிய போர்க்கொள்கை அழித்துப் பின்வாங்குதல் ஆகும். இதனால் அவர்கள் முக்கிய பாலங்களை அழித்துப் பின்வாங்கினர். இது ஹிட்லருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. ஹிட்லர் சோவியத் யூனியனை கைப்பற்ற செய்த நடவடிக்கைகளும், கொடுமைகளும் வானவில் புதினம் எடுத்துக் கூறுகிறது.
ஐந்தாம் இயல்
தொகுஐந்தாம் இயலான வானவில் நாவலின் கட்டமைப்பு என்பதில் கதைப் போக்கு, கதைக்கரு, காலப்பின்னணி, கதைப்பின்னல், உத்திகள் ஆகியன ஆராயப்படுகின்றன. வானவில் நாவலில் கதைப்பின்னலானது தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே சீராக அமைகிறது. கிராம சோவியத் என்னும் கிராமத்தின் நிகழ்வுகள் தான் கதைப்பின்னலாய் அமைந்து உள்ளது. அந்த கிராம மக்கள் ஜெர்மனியருக்கு எதிராக செயல்பட்டு பெற்ற வெற்றி கதையின் முடிவாய் அமைக்கப்பட்டுள்ளது. வானவில் நாவலல் நடைபெறும் காலம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இரஷ்யா மிகுந்த பனிப் பொழிவினை உடைய நாடு ஆகும். ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்த காலம் அங்கு பனிக்காலம் ஆகும். ஜெர்மனியருக்கு பழக்கமில்லாத காலம் ஆகும். நாவல் முழுவதும் பனிக்காலமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் காட்டப்பட்டுள்ளன.
ஆறாம் இயல்
தொகுஆறாம் இயலான முடிவுரையில் ஐந்து இயல்களிலும் பெறப்பட்ட செய்திகள் வழி ஆய்வு முடிவுகள் கூறப்பட்டு உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நூல்கள் துணை நூற்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. == துணைநூற்பட்டியல் == வாண்டா வாஸிவெல்ஸ்கா, வானவில், நிய செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.