யுனிக்ஸ் கையேடு

யுனிக்ஸ் கையேடு என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது யுனிக்சு இயக்க அமைப்பைப் பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.

யுனிக்ஸ்

யுனிக்சு என்றால் என்ன?

தொகு
  • யுனிக்சு என்பது ஓர் இயக்க அமைப்பு / இயங்கு தளம் / இயக்ககம்
  • மென்பொருள் உருவாக்கத் தளம் (Software development environment)
  • அறுபதுகளின் பின்னாட்களில் கென் தாம்ப்சன், டென்னிஸ் ரிட்சி முதலியோரால் உருவாக்கப்பட்டது.
  • முதலில் இடைநிலை மொழியில் (Assembly language) கென் தாம்ப்சனால் எழுதப்பட்டது. பின்னர் சி-மொழியில் டென்னிஸ் ரிட்சியால் மீண்டும் எழுதப்பட்டது.

குறிப்பு

தொகு
இயக்க அமைப்பே (இயங்குதளம், இயக்ககம்) கணினியை நிர்வகிக்கிறது. வேறு விதத்தில் கூற வேண்டுமெனில் இயக்க அமைப்பானது கணினி அமைப்பின் கூறுகளை ஒரு சேரப் பிடித்திருக்கும் ஒரு பசை எனலாம்.

யுனிக்சின் சிறப்பியல்புகள்

தொகு
  • பல்பயனர் அனுமதி (Multi user)
  • படிநிலைக் கோப்பு அமைப்பு (Hierarchical file system)
  • பல்பணிச் சூழல் (Multi tasking environment)
  • இணைப்பிகள் (Threads)
  • மெய்நிகர் நினைவகம் (Virtual memory)
  • உட்பொதிந்த வலையமைப்பு (Built in network)
  • மிக அதிகப் பயன்பாட்டுத் தொகுதி

யுனிக்சின் உட்புறம்

தொகு
  • அமைப்பு உள்ளகம் (System internal)
  • ஓடு (Shell)
  • கோப்பு அமைப்பு (File system)
  • செயலாக்க மேலாண்மை (Process management)

யுனிக்சு அமைப்பு

தொகு

இவ்விடத்தில் யுனிக்சு இயக்க அமைப்பின் பாகங்களைக் குறிக்கும் படம் ஒன்றைச் சேர்க்க வேண்டும்

யுனிக்சு ஓடுகளின் வகைகள்

தொகு
  1. சி – ஓடு (C – shell)
  2. போர்ன் ஓடு (Borne shell)
  3. கார்ன் ஓடு (Korn shell)
  4. டி – ஓடு (T – shell)
  5. பாஷ் ஓடு (Bash shell)

யுனிக்சின் பகுதிகள்

தொகு
  1. கருனி (Kernel)
  2. அடிப்படைப் பயன்பாட்டு நிரல்கள் (Standard utility programs)
  3. அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள் (System configuration files)

கருனி

தொகு
  • கருனி என்பதே யுனிக்சு இயக்க அமைப்பின் கருவாகும். (Core)
  • கணினி இயக்கப்பட்டவுடன் (Turn on) இந்தக் கருனி எனப்படும் மிகப்பெரிய நிரலானது கணினியின் நினைவகத்திற்குள் ஏற்றப்படுகிறது. இது வன்பொருளுக்கான இட ஒதுக்கீட்டினைக் கட்டுப்படுத்துகிறது.
  • எந்தெந்த வன்பொருள் அமைப்புகள் உள்ளன என்பதைக் கருனி தெரிந்து வைத்துக் கொள்ளும். (எ.கா. செயலி, நினைவகம், வட்டுகள்) அனைத்துச் சாதனைங்களையும் ஒருங்கே இயக்கத் தேவையான நிரல்களைக் கருனி தன்னகத்தே கொண்டுள்ளது.

அடிப்படைப் பயன்பாட்டு நிரல்கள்

தொகு
  • இந்நிரல்கள் கோப்புகளை நகலெடுக்கப் பயன்படும் cp போன்ற எளிய கட்டளைகள் முதற்கொண்டு, இயக்க அமைப்பினைக் கட்டுப்படுத்தக் கூடிய tar போன்ற கடினமான கட்டளைகள் வரை தன்னகத்தே கொண்டுள்ளன.

அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள்

தொகு
  • அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள் கருனியாலும் சில அடிப்படைப் பயன்பாட்டு நிரல்களாலும் படிக்கப்படுகின்றன.
  • யுனிக்சின் கருனியும் பிற பயன்பாட்டு நிரல்களும் மாற்றத்தகு (Flexible) நிரல்களாகும். அவற்றின் சில பண்புக் கூறுகள் அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகளில் மாற்றம் செய்வதன் மூலம் மாற்றப்படலாம்.
  • fstab எனும் கோப்பமைப்பு அட்டவணைக் கட்டளையானது அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது வட்டிலுள்ள அனைத்து கோப்புகளையும் கண்டறியுமாறுக் கருனியைப் பணிக்கிறது.

அடிப்படை யுனிக்சு கட்டளைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

தொகு
கட்டளை பயன்பாடு கட்டளை அமைப்பு
pwd தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்பகத்தைக் காட்டுகிறது pwd எனத் தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
mkdir ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது mkdir   (கோப்பகப்_பெயர்)
cd கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது cd   (ஏற்கனவே_உள்ள_கோப்பகத்தின்_பெயர்)
rmdir ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது rmdir   (வெற்றுக்_கோப்பகப்_பெயர்)
rm கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது rm   (கோப்பின்_பெயர்))
man ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது man   (கட்டளையின்_பெயர்)
ls கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது ls   எனத் தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
find கோப்புகளையும் கோப்பகங்களையும் அவற்றின் பெயர் கொண்டு தேட உதவுகிறது ls   (தேடவேண்டியதின்_பெயர்)
cp கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது cp   (நகலெடுக்கப்பட_வேண்டிய_கோப்பு ,  நகல்_கோப்பு)
mv கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது mv   (பழைய_பெயர் ,  புதிய_பெயர்)
cat கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது cat   கோப்பின்_பெயர்
df வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது df   என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
du வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது du   என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
more கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது more   (கோப்பின்_பெயர்)
less கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது less   (கோப்பின்_பெயர்)
head கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது head   (கோப்பின்_பெயர்)
tail கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது tail   (கோப்பின்_பெயர்)
history ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது history   என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்


புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=யுனிக்ஸ்_கையேடு&oldid=14096" இலிருந்து மீள்விக்கப்பட்டது