மெய் உணர்தல்
|
திருக்குறள் > துறவறவியல்
- 351. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
- மருளானாம் மாணாப் பிறப்பு.
- 352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
- மாசறு காட்சி யவர்க்கு.
- 353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
- வானம் நணிய துடைத்து.
- 354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
- மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
- 355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்பது அறிவு.
- 356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
- மற்றீண்டு வாரா நெறி.
- 357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
- பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
- 358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
- செம்பொருள் காண்பது அறிவு.
- 359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
- சார்தரா சார்தரு நோய்.
- 360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
- நாமம் கெடக்கெடும் நோய்.