மாங்கோடிபி/மாங்கோடிபிக் க்ருட்(CRUD) செயல்பாடுகள்

மாங்கோடிபிக் க்ருட்(CRUD) செயல்பாடுகள் முன்னுரை தொகு

மாங்கோடிபி தரவுகளை கையாள்வதற்கு வளமான குறிகளைக் கொண்டுள்ளது.க்ருட்(CRUD) என்பது பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது:

  • உருவாக்க (Create)
  • படிக்க (Read)
  • புதுப்பித்தல் (Update)
  • அழிக்கவும் (Delete)

மாங்கோடிபி தரவுகளை ஆவணங்களாக சேமிக்கிறது. இங்கு குறிப்பிடப்படும் ஆவணமானது நிரல் மொழிகளில் தரவுக் கட்டமைப்பை ஒத்து இருக்கிறது. மாங்கோடிபி அனைத்து ஆவணங்களையும் திரட்டுக்களாக(Collections) சேமிக்கிறது. இது தொடர்புசார் தரவுத்தளங்களில் நிரல் அல்லது அட்டவணை எனப்படுகிறது.

 

தரவுத்தள செயல்பாடுகள் தொகு

வினவல் தொகு

மாங்கோடிபியில் ஒரு வினவல் ஒரு ஆவணங்களின் தொகுப்பினைத் தருகிறது. வினவலானது ஒரு ஆவணத்தை கட்டளை விதிகளையும், படிநிலைகளையும் பொறுத்து அதனை வினவுபபவர்களுக்கு அனுப்புகிறது. ஒரு வினவலானது திருப்பி அனுப்பப்படும் ஆவணத்தின் புலன்களைக் கொண்ட ஒரு எரியமாக இருக்கும். நாம் வேண்டுமென்றால் மாற்றியமைப்பி பயன்படுத்தி ஒரு வினவலில் ஒரு சில தடைகள், சிலவற்றை தவிர்த்தும், வரிசைப்படுத்தியும் விடலாம்.

 

தரவு மாற்றியமைத்தல் தொகு

தரவு மாற்றியமைத்தல் என்பது உருவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் அழித்தல் போன்ற செயல்களாகும். இந்த செயல்கள் அனைத்தும் ஒரு திரட்டியில் செய்யப்படுவதாகும்.

 
திரட்டியில் செய்யப்படும் செயல்கள்

படிக்கும் செயல்பாடுகள் தொகு

படிக்கும் செயல்பாடுகள் வினவல்கள் மூலம் தரவுத்தளத்தில் உள்ள ஓரு திரட்டியிலிருந்து ஆவனங்களை பெற உதவுகிறது.

வினவல்கள் மாங்கோடிபி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை கட்டளை விதிகள், கட்டுப்பாடுகளை பொறுத்து அளிக்கிறது.

வினவல் இடைமுகப்பு தொகு

வினவல் செயல்பாடுகளுக்கு மாங்கோடிபி db.collection.find() என்ற வழிமுறையை பயன்படுத்துகிறது.