மலையாள எழுத்துக்கள்

<!


உரை திருத்தம் தேவை-------------------------------------------------------------->

அறிமுகம்

தொகு

மலையாள எழுத்துமுறை அபுகிடா வகையைச் சேர்ந்தது. மலையாள எழுத்துக்களில் ஆரிய, திராவிட மொழிகளின் பெரும்பாலான ஒலிகளுக்கான எழுத்துகள் உண்டு. பல மலையாள எழுத்துகள் தமிழ் எழுத்துகளைப் போன்றே இருக்கும். அதனால், எளிதில் கற்றுவிடலாம். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுக்களில் இருந்து தோன்றின. எனவே, மலையாள எழுத்துமுறையைக் கற்றால், ஏனைய இந்திய மொழிகளுக்கான எழுத்துமுறையையும் எளிதாகக் கற்கலாம்.

பயன்

தொகு

மலையாள எழுத்துகளைப் படிப்பதால் விளையும் பயன் கீழே தரப்பட்டுள்ளது.

  • மலையாளத்தில் எழுதப்பட்ட நூல்களையும், கதைகளையும் படிக்கலாம்.
  • மலையாளத்தை எழுதும் முறையை அறிந்து கொள்வதால், பிற மொழிகளை எழுதும் முறையையும் கற்கலாம்.

அம்மா

நெடுங்கணக்கு

தொகு

உயிர் எழுத்துக்கள்

தொகு
உயிர் எழுத்து உயிரெழுத்து குறி 'ப'கர உயிர்மெய்   ஒத்த தமிழ் எழுத்து IPA ஒலிப்பு குறிப்பு
  (pa) அ   a short 'a'
പാ (pā) long 'a'
ി പി (pi) i short 'i'
പീ (pī) long 'i'
പു (pu) u short 'u'
പൂ (pu) long 'u'
പൃ (pr) 'ரு' r< தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல
    (pr) 'ரு'வின் நெடில்   - பொதுவழக்கில் இல்லை
      'ரு'வின் லகர இணை   - பொதுவழக்கில் இல்லை
      'லு'வின் நெடில்   - பொதுவழக்கில் இல்லை
പെ (pe) e  
പേ (pē)  
പൈ (pai) ai  
പൊ (po) o short 'o'
പോ (pō) long 'o'
പൌ (pau) au  
അം ം   പം (pau) அம் aṃ அனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு 
അഃ പഃ (pau) அஹ aḥ - விஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

மெய்யெழுத்துக்கள்

தொகு
மலையாளம் யூனிகோட் பெயர் ஒத்த தமிழ் எழுத்து IPA ஒலிப்பு
KA k
KHA க்+ஹ kh
GA க - ம'க'ன் g
GHA 'க்' + ஹ gɦ
NGA ŋ
CHA
CHHA ச்+ஹ
JA
JHA ஜ்+ஹ ɦ
NJA ɲ
TTA ʈ
TTHA ட்+ஹ ʈh
DDA ட - ம'ட'ம் ɖ
DDHA 'ட்'+ஹ ɖɦ
NNA ɳ
THA t
THHA த்+ஹ th
DA  த - ம'த'ம் d
DHA 'த்'+ஹ dh
NA n
PA p
PHA ப்+ஹ ph
BA ப- க'ப'ம் b
BHA 'ப்'+ஹ bɦ
MA m
YA j
RA ɾ
LA l
VA ʋ
SHA ஸ மற்றும் ஷவிற்கு இடையில் உச்சரிக்க வேண்டும் ɕ
SSA ʃ
SA s
HA ɦ
LLA ɭ
ZHA ɻ
RRA r


சில்லுகள்

தொகு
ൿ

மேலும் காண்க: மலையாளம் எழுத்துக்கள் எழுத பழகு

எழுதும் முறை

தொகு

முதலில் தமிழுடன் மலையாளத்திற்கு உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம். பின்னர், மலையாளத்தில் உள்ள தனித்தன்மையைப் பார்ப்போம்.

தமிழுடன் ஒற்றுமை

தொகு

தமிழ் எழுதத் தெரிந்தால் மலையாளத்தில் எழுதுவது எளிது.

தமிழில் எழுதுவதைப் போன்றே மலையாளத்திலும் எழுதுகின்றனர்.

எ.கா: உயிரும் மெய்யும் சேரும். க்+ஆ=கா | ക്+ആ=കാ

மலையாள எழுத்துக்களின் பயன்பாடும் தமிழும்

தொகு

மிடற்றொலிகள்

தொகு

குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.

மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதுகின்ற போது ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிக்ளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்

உதாரணமாக,'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) எனவே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன தமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்பட்டாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்

வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு

தொகு

மலையாளத்தில் எழுதப்படும் வடமொழிச் சொற்கள் திராவிட முறைக்கு ஏற்றவாறு உச்சரிக்கப்படுகின்றன.

உதாரணமாக സ്വാഗതം(svāgatam) என்ற எழுதினாலும் அதை svāgadam என்றே உச்சரிக்கின்றனர். இதைபோல் பெரும்பாலான வடமொழி சொற்கள் வடமொழியின் சொற்சேர்க்கையை பின் பற்றினாலும் திராவிட முறைக்கு ஏற்பவை உச்சரிக்கப்படுகிறது.

தனித் தன்மை

தொகு

ஆனால், மலையாளத்தில் வடமொழி எழுத்து வழக்கமும் பின்பற்றுகின்றனர். அவற்றில் முக்கியமானவை: 1. மெய் எழுத்தை அடுத்து வரும் ர, ய போன்ற எழுத்துகளுக்கு புதிய வடிவம் உண்டு. 2. மெய்யெழுத்தையும், அதை அடுத்து வரும் உயிர்மெய்யெழுத்தையும் இணைத்து எழுதுகின்றனர்.

சில்லு எழுத்துகள்:

-குற்றியலுகரப் பயன்பாடுகள் தமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுதப் பயன்படுத்துவது போல் மலையாளத்தில் 'சந்திரகலையை' குற்றியலுகரத்தைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர்.


உதாரணமாக அது - അത്(அத்) தேக்கு - തേക്ക്(தேக்க்) கூடு - കൂട്(கூட்)

குற்றியலுகரத்தைக் குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு

அது - അതു്(அது) தேக்கு - തേക്കു്(தேக்கு) கூடு - കൂടു്(கூடு)

எனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியற்றின் குற்றியலுகரமாக ஒலிப்படும்.. இதைப்போக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளைக் குறிக்க சில்லெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளளயே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர்.

ண் - ണ്‍ ன் - ന്‍ ர் - ര്‍ ல் - ല്‍ ள்- ള്‍

ஒலித் திரிபுகள்:
கூட்டெழுத்துக்கள்:

கிரந்தத்திலிருந்து உருவான எழுத்துமுறையாதலால் மலையாளத்தில் பல்வேறு கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக கீழ்க்கண்ட கூட்டெழுத்துக்களைக் காணவும்

ക്ല - க்ல ക്ര - க்ர ക്വ - க்வ ക്യ - க்ய

ത്ത - த்த പ്പ - ப்ப ന്ന - ன்ன ണ്ണ - ண்ண

மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதுகின்ற போது ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிக்ளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்

உதாரணமாக,'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) எனவே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன தமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்பட்டாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்


பிற குறியீடுகள்

தொகு
குறியீடு பெயர் Function
சந்திரக்கலை தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது
அனுஸ்வரம் மூக்கொலிக்கு
விசார்க்கம் எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்ர்கும்.

மலையாள எழுத்து வழக்கம்

தொகு

பிற மொழிச் சொற்களை எழுதும் வழக்கம்

தொகு

மலையாளத்தில் ஈழத்தமிழில் பயன்படுத்துவது போலவே சில எழுத்துப்பயன்பாடுகள் கானப்படுகின்றன. റ്റ(ற்ற) 'ட(t)'வாக ஒலிக்கப்படுகிறது. ന്‍റ(ன்ற) என்பதை nt,nd என்பது போல ஒலிக்கப்படுகிறது. Comedy, October என்பவை കോമടി(கோமடி), ഒക്ടോവര്‍(ஒக்டோபர்) என மலையாளத்தில் வழங்கப்படுகின்றன.


உதாரணமாக:

Font - ഫോന്‍റ്(ஃபோன்ற்)  Internet - ഇന്‍റെര്‍നെറ്റ്(இன்றெர்னெற்ற்)   Pilot - പൈലറ്റ്(பைலற்ற்)

Antony - ആന്‍റനി(ஆன்றனி) போன்றவைகளை குறிப்பிடலாம்


இணைப்புகள்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=மலையாள_எழுத்துக்கள்&oldid=17593" இலிருந்து மீள்விக்கப்பட்டது