மருந்து
திருக்குறள் > நட்பியல்
- 941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
- வளிமுதலா எண்ணிய மூன்று.
- 942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
- அற்றது போற்றி உணின்.
- 943. அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
- பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
- 944. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
- துய்க்க துவரப் பசித்து.
- 945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
- ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
- 946. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
- கழிபேர் இரையான்கண் நோய்.
- 947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
- நோயள வின்றிப் படும்.
- 948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
- வாய்நாடி வாய்ப்பச் செயல்.
- 949. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
- கற்றான் கருதிச் செயல்.
- 950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
- அப்பால் நாற் கூற்றே மருந்து.