பொருள் நோக்கு நிரலாக்கம்/மரபியல்பாக்கம்
மரபியல்பாக்கம் (inheritance) என்பது ஒர் அடிப்படை வகுப்பில் இருந்து அதே வகை இன்னொமொரு வகுப்பை உருவாக்கப் பயன்படும் உத்தி ஆகும். ஒரு பொருளுக்கும் இன்னுமொரு பொருளுக்கும் இது ஒரு (ஆங்கிலத்தில் is a) உறவு இருக்கும் பட்சத்தில் மரபியல்பாக்கம் ஊடாக புது வகுப்பை உருவாக்குவது பொருத்தம் ஆகும். இதனை வகுப்புகளுக்கு இடையே பெற்றோர் பிள்ளை உறவு உள்ளது என்றும் விபரிக்கலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய நான்கு கூறுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான மொழிகளில் extends என்ற சொல்லைப் பயன்படுத்தி மரபியல்பாக்கம் செய்வார்கள்.
எடுத்துக்காட்டுக்கள்
தொகுயாவா
தொகுநாம் முன்னர் பார்த்த மாணவர் என்ற வகுப்பில் இருந்து பட்டதாரி_மாணவர் என்ற ஒரு வகுப்பை மரபியல்பாக்கம் ஊடாக பின்வருமாறு உருவாக்கலாம்.
package student;
public class பட்டதாரி_மாணவர் extends மாணவர் {
// பண்புகள்/மாறிகள்
private String மேற்பார்வையாளர்;
private String ஆய்வுத்_துறை;
// கட்டுநர்
பட்டதாரி_மாணவர்(int மாணவர்_எண், String பெயர், String ஆய்வுத்_துறை){
super(மாணவர்_எண், பெயர்);
this.ஆய்வுத்_துறை = ஆய்வுத்_துறை;
}
public void மேற்பார்வையாளரை_இடு(String மேற்பார்வையாளர்){
this.மேற்பார்வையாளர் = மேற்பார்வையாளர்;
}
public void ஆய்வேடு_சமர்ப்பி(String ஆய்வுத்_தலைப்பு){
System.out.println(this.ஆய்வுத்_துறை + " துறையில் முதுநிலைப் பட்டயம் படிக்கும் " + this.பெயர் +
" தனது பட்டம் பெறுவதற்கான ஆராச்சியை " + ஆய்வுத்_தலைப்பு + " என்ற தலைப்பில் மேற்கொள்ளவுள்ளார்.");
}
}