பொருள் நோக்கு நிரலாக்கம்/உறைபொதியாக்கம்

பொருள் நோக்கு நிரலாக்கத்தில் உறைபொதியாக்கம் என்பது நிரல் கூறுகளுக்கான அனுமதியை கட்டுப்படுத்தும் வழிமுறை ஆகும். யார் யாருக்கு எந்த வகுப்புகளுக்கு அல்லது செயலிகளுக்கு அனுமதி உண்டு என்பதைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக மென்பொருளின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் உறைபொதியாக்கம் உதவுகிறது.

பெரும்பாலான மொழிகள் பின்வரும் அனுமதி குறியீடுகளைக் கொண்டுள்ளன. ஒரு வகுப்பை, அல்லது வகுப்பின் குறிப்பிட்ட புலங்களை அல்லது செயலிகளை இக் குறியீடுகளைப் பயன்படுத்தி அவற்றுக்கான அனுமதியைக் கட்டுப்படுத்த முடியும்.

public - பொது: எல்லா வகுப்புகளும் பயன்படுத்தலாம்.
protected - பாதுகாக்கப்பட்டது: தன் வகுப்பும், அதன் வழித்தோன்றல் வகுப்புக்களும் பயன்படுத்தலாம்.
private - தன் வகுப்பு மட்டுமே பயன்படுத்த முடியும்.