பொருள் செயல்வகை
திருக்குறள் > கூழியல்
- 751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
- பொருளல்லது இல்லை பொருள்.
- 752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
- எல்லாரும் செய்வர் சிறப்பு.
- 753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
- எண்ணிய தேயத்துச் சென்று.
- 754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
- தீதின்றி வந்த பொருள்.
- 755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
- புல்லார் புரள விடல்.
- 756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
- தெறுபொருளும் வேந்தன் பொருள்.
- 757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
- செல்வச் செவிலியால் உண்டு.
- 758. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
- உண்டாகச் செய்வான் வினை.
- 759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
- எஃகதனிற் கூரிய தில்.
- 760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
- ஏனை இரண்டும் ஒருங்கு.