பொருளியல்- ஓர் அறிமுகம்
பொருளாதாரம் -1( அறிஞர்கள் -நூல்கள் – மேற்கோள்கள் – வறையரைகள்)
ஆடம் ஸ்மித் இவர் பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
“நாடுகளின் செல்வம் ” என்பது இவர் எழுதிய நூலின் பெயராகும்.
” பொருளாதாரம் என்பது செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியல்” – என ஆடம் ஸ்மித் தனது நூலில் கூறுகிறார்
வேலைப் பகுப்பு முறையை விளக்க ஆடம் ஸ்மித் தரும் உதாரணம் குண்டூசி தயாரிப்பு. குண்டூசி தயாரிப்பில் 18 பிரிவுகள் உள்ளன. வேலைபகுப்பு முறையில் ஒரு தொழிலாளி 4800 குண்டூசிகளைத் தயார் செய்யமுடியும்.(10 பேர் 48000 குண்டூசிகள், ஒரு ஆள் 4800 குண்டூசிகள்). அதுவே வேலைபகுப்பு இன்றி செய்தால் ஒரு தொழிலளி ஒருநாளைக்கு ஒரு குண்டூசிதான் தயாரிக்க முடியும்.
இலயன்ஸ் ராபின்ஸ்
“பொருளியல் என்பது பற்றாக்குறையான வளங்களோடு மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியல்”
வறையரைகள்
தொகுநிலம்: மனிதனால் உருவாக்கப்படாதா அனைத்தும் நிலம் எனப்படும்.
உழைப்பு: ஊதியம் பெருவதற்கான உழைப்பு. உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு.
கூலி: உழைப்பின் வெகுமதி.
மூலதனம்: மனிதனால் உருவாக்கப் பட்ட செல்வம்.
பருமப் பொருள் மூலதனம்: கட்டிடங்கள், இயந்திரங்கள் முதலிய மனிதனால் உருவாக்கப் பட்டவைகள்.
பண மூலதனம்: பணம் மற்றும் பண மதிப்புடைய பத்திரங்கள்.
மனித மூலதனம்: கல்வி, பயிற்சி போன்றவைகள்.
உண்மைக் காரணிகள்: நிலமும் உழைப்பும்.
பெறப்பட்ட காரணிகள்: மூலதனம், தொழில் அமைப்பு.
தொழில் அமைப்பு: நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய உற்பத்தி காரணிகளை ஒருங்கிணைத்து இடர்பாடுகளை ஏற்கும் காரணி.
தொழில்முனைவோர்: அனைத்து உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்து இடர்பாடுகளையும், நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர் கொள்பவர்.
சமுதாய மாற்றம் கானும் முகவர்: தொழில் முனைவோர்.
உற்பத்திக் காரணிகள் | வெகுமதிகள் | தன்மை |
---|---|---|
மூலதனம் | வட்டி | பெறப்பட்ட (அ) தருவிக்கப்பட்டஉற்பத்திக் காரணிகள் |
நிலம் | வாரம்(வாடகை) | அடிப்படை |
தொழிலமைப்பு | லாபம் | - |
உழைப்பு | கூலி | உண்மைக் காரணிகள்(அ) உற்பத்திக் காரணிகள் |
துறைகள்.
முதண்மைத் துறை: இயற்கைப் பொருட்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுவது.( விவசாயம், மீன் பிடித்தல்,வனம் சார்ந்த தொழில்கள், சுரங்கத் தொழில் முதலியன.)
இரண்டாம் துறை: மூலப் பொருள்களை உற்பத்திப் பொருள்களாக மாற்றுவது.(உ.ம்: கட்டுமானம், கைவினைப் பொருட்கள், சிறு மற்றும் பெரும் தொழில்கள் )
சார்புத் துறை: பிற துறைகளுக்கு உதவி அல்லது பிற துறைகள் இதைச் சார்ந்து இருக்கும்.(வங்கி, கல்வி முதலியன).
இந்தியாவில் துறைகளின் பங்களிப்பு (சதவீதத்தில்)
முதன்மைத் துறை: 15.8
இரண்டாம் துறை: 25.8
சார்புத் துறை: 58.4
பொருளாதாரம் 2 (பணம், சேமிப்பு, தேவை, அளிப்பு)
பணம்
“பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும்”- வாக்கர்
“பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அவையெல்லாம் பணமாகும்” – வாக்கர்
“மானட்டா” – என்றால் லத்தீன் மொழியில் பணம். மானட்டா என்பது ஜினடோ என்ற ரோமானிய பெண் கடவுளின் இன்னொறு பெயராகும். Money என்னும் ஆங்கிலவார்த்தை மானட்டாவிலிருந்து வந்தது.
பணம்: காசு, காசோலைகள், ரூபாய் நோட்டுகள், செலுத்து சீட்டு, கடன் அட்டைகள் முதலியன.
பனத்தின் மதிப்பீடு: மக்களின் நுகர்வுத் திறனை அடிப்படையாகக் கொண்டது.நுகர்வுத் திறன் பொருளின் விலையைப் பொருத்தது.
சேமிப்பு: வருமானத்தில் செலவு செய்யாமல் மீதம் இருக்கும் பணம்.
முதலீடு: சேமிப்பை உற்பத்தியில் ஈடுபடுத்துவது.
(சேமிப்பு நுகர்வோரிடமும், மூலதனம் தொழில் அதிபர் கரத்திலும் உள்ளது.)
தேவை: வாங்கும் சக்தியுடன் கூடிய விருப்பம்.
தேவையை தீர்மானிக்கும் காரணிகள்:
1.முக்கிய காரணி விலை. 2.பதிலீட்டு (மாற்று) பண்டத்தின் விலை. 3.நுகர்வோரின் எண்ணிக்கை 4.எதிர்கால விலை மாற்றம் 5.வருமான பகிர்வு 6.பருவகால மாற்றங்கள்
தேவை விதி: ஆல்பர்ட் மார்ஷல்
“விலை உயர்ந்தால் தேவைக குறையும், விலை குறைந்தால் தேவை அதிகரிக்கும்” – தேவையும் விலையும் தலைகீழ் விகிதம்.
தேவை விதிக்கு மாறாக விலை உயர்ந்தால் / தேவை அதிகரிப்பது: வெப்ளன் விளைவு.(உதாரணம் வைரத்தின் விலை)
தேவை விதிக்கு மாறாக விலை குறைந்தால் தேவையும் குறைவது: கிஃபன் விளைவு.(கேழ்வரகு)
அளிப்பு: உற்பத்தியாளரிடமிருந்து. குறிப்பிட்ட விலையில் ஒரு பொருளை அளிப்பது.
விலை அளிப்பை தீர்மானிக்கும் காரணிகள்:
•உற்பத்தி தொழில் நுட்பம் •காரணிகளின் விலை(மூலப் பொருட்களின் விலை) •மாற்றுப் பண்டங்களின் விலை •ஒரு பொருளை தயார் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை •வருங்கால விலை பற்றிய எதிர் பார்ப்பு. •வரிகள் மற்றும் சலுகைகள் •பொருளாதாரம் சாரா காரணிகள்( போர், இயற்கை இடையூருகள் முதலியன)
அளிப்பு விதி:
இது தேவை விதிக்கு எதிரானது. விலை உயர்ந்தால் அளிப்பு உயரும்; விலை குறைந்தால் அளிப்பு குறையும்.
சமவிலை: குறிப்பிட்ட விலையில், வாங்கப்படும் அளவும், விற்கப்படும் அளவும் சமமாக இருக்கும்.
சமவிலை நிர்ணயமும் காலத்தின் பங்கும்.(ஆல்பர்ட் மார்ஷல்)
1.மிக குறுகிய காலம்(அங்காடி காலம்):தேவைக் கேற்றவாறு அளிப்பை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. எனவே தேவை தான் விலையை நிர்ணயிக்கும். 2.குறுகிய காலம்: ஒரளவு தேவைக் கேற்றவாறு அளிப்பை கூட்டவோ, குறைக்கவோ முடியும். எனவே விலையில் சிறிதளவு மாற்றம் இருக்கும். தேவைக் குறைவு சிறிய விலை குறைவு.தேவை அதிகம், சிறிய விலையேற்றம். 3.நீண்ட காலம்:தேவை மாற்றத்தை அளிப்பு மாற்றம் சரி செய்யும்.