பேச்சு:பாடம்:தூயக் கணிதம்

தூயக் கணிதம், என்ற பகுப்பில் எவ்வகையான நூல்கள் இருக்க வேண்டும் என குழப்பத்தில் இருக்கிறேன். ஏனெனில் இதுவரை அப்படி ஒரு கணிதப் பிரிவு பற்றியோ, அல்லது அப்படி ஒரு பிரிவு இருப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை. தாங்கள் இயற்கணிதம் என்பதையா? இங்கு கூறுகிறீர்கள் எனவும் ஒரு சந்தேகம் வருகிறது. விளக்கினால் நலம் என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 12:41, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இயற்கணிதம் - Algebra. தூயக் கணிதம் - Pure mathematics. --இராஜ்குமார் 12:46, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply
சரி இராஜ்குமார் நலமே. தூயக் கணிதம் பகுப்பு நன்றாகவே உள்ளது. இருந்து எனக்குத் தோன்றுகிற சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.
தற்போது ஆங்கில பதிப்பை பார்த்தேன் அங்கு Pure mathematics என்றொரு பிரிவு இருப்பது அறிந்தேன். ஆனால் இந்த பகுப்பினால் நமது தமிழ் விக்கி படிப்பர்கள் (முக்கியமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இவர்கள்தான் இந்தப் பிரிவை அதிகம் பயன்படுத்தப் போகிறவர்கள். ஏனெனில் தூய கணிதம் என்ற வரையறை எதனைக் குறிப்பிடுகிறது என்பது பற்றிய விளிப்புணர்வுகூட இல்லாத படிப்பர்க்ளும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.) குழம்பாமல் இருந்தால், இவ்வாறே பிரிவை அமைக்கலாம் எனத் தோன்றுகிறது. தாங்கள் இதனால் படிப்பர்களுக்கு குழப்பம் வராது என ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துக் கொள்வது நலம் என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 13:19, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply
கணிதத்தில் பல பகுப்புகள் இருக்கிறது, எல்லாவற்றையும் 5 அல்லது 6 பகுப்புக்களுள் கொண்டுவரவேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆன நூல்கள், பாடநூல்கள் என்ற பகுப்பிலும் இடம் பெரும். ஆகையால் ஐயம் தேவையில்லை. அதாவது ஒரு நூல் இரண்டு மூன்று பகுப்பில் கூட வர வாய்ப்புள்ளது. நன்றி. --இராஜ்குமார் 16:43, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply
சரி இராஜ்குமார். அப்படி என்றால் பாடம்:தூயக் கணிதம் இந்த தொகுப்பையே வைத்துக் கொள்வோம்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:பாடம்:தூயக்_கணிதம்&oldid=6907" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாடம்:தூயக் கணிதம்" page.