பெரியாரைப் பிழையாமை
திருக்குறள் > நட்பியல்
- 891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
- போற்றலுள் எல்லாம் தலை.
- 892. பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
- பேரா இடும்பை தரும்.
- 893. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
- ஆற்று பவர்கண் இழுக்கு.
- 894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
- ஆற்றாதார் இன்னா செயல்.
- 895. யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
- வேந்து செறப்பட் டவர்.
- 896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
- பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
- 897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
- தகைமாண்ட தக்கார் செறின்.
- 898. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
- நின்றன்னார் மாய்வர் நிலத்து.
- 899. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
- வேந்தனும் வேந்து கெடும்.
- 900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
- சிறந்தமைந்த சீரார் செறின்.