பெண்வழிச் சேறல்
திருக்குறள் > நட்பியல்
- 901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
- வேண்டாப் பொருளும் அது.
- 902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
- நாணாக நாணுத் தரும்.
- 903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
- நல்லாருள் நாணுத் தரும்.
- 904. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
- வினையாண்மை வீறெய்த லின்று.
- 905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
- நல்லார்க்கு நல்ல செயல்.
- 906. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
- அமையார்தோள் அஞ்சு பவர்.
- 907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
- பெண்ணே பெருமை உடைத்து.
- 908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
- பெட்டாங்கு ஒழுகு பவர்.
- 909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
- பெண்ஏவல் செய்வார்கண் இல்.
- 910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
- பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.