பூனைக்குடும்ப விலங்குகள்/முன்னுரை
எமது பூமியில் உள்ள அருமையான விடயங்களில் ஒன்று காட்டில் வாழும் பூனைக்குடும்ப விலங்குகள் , அவற்றின் தகவல்கள் சுவாரிசியம் ஏற்படுத்துவதுடன் சிறுவர்களின் கற்பனைக்கு விருந்தாகவும் அமைகின்றன .இன்று பல பூனை இனங்கள் அழிவடைந்து விட்டன, சில அழிவடைந்து கொண்டு இருக்கின்றன.நாளைய சமூகமான இந்த சிறுவர்கள் இதற்கு பொறுப்பேற்க ஆளாக்கப்படுவார்கள்.அவ்வினங்களின் வாழ்வியலை அறிய வேண்டிய அவசியத்தில் சிறுவர்கள் உள்ளனர்.அவ்வினங்களின் சிறப்புகளை அறியும் போதே அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்பும் .அதனாலேயே எமது நேரம் மற்றும் உழைப்பால் இந்த நூலை கூட்டுமுயற்சியால் உருவாக்கியுள்ளோம் .
சிறுவர்களிடமும் பெரியவர்களிடமும் அறிவை இலவசமாகவும் இலகுவாகவும் வாசிப்பினூடாக கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே விக்கிமீடியாவின் விக்கிநூல்கள் செயற்திட்டம் செயற்படுகின்றது.பாரம்பரிய பதிப்பகங்கள் பிரபல்யமான நூல்களின் மீள்பதிப்புகளின் விற்பனை மூலமும் பிரபல்ய எழுத்தாளர்களின் நூல்கள் அல்லது பிரபல்யமானவர்களின் நூல்களின் விற்பனை மூலமும் பெருவாரியான வருவாயயை ஈட்டுகின்றன,அதனால் புதிய சிறப்பான ஆக்கங்களின் வெளியீடு குறைவாகவே உள்ளது . பாரம்பரியத்தை கைவிட்டு இவ்வாறான திட்டங்களுக்கு இணையத்தை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளையும் வெளியில் கொண்டுவர முடியும் .
இந்த நூல் திட்டத்தின் மூலம் பாரம்பரியத்தை உடைத்து புதிய முயற்சியில் வெற்றியடைய முடிந்துள்ளது. இந்நூலை வாசிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் சொல்வதன் மூலமும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன் எழுத்துலகத்துக்கும் சுதந்திரம் பெற்றுகொடுக்கிறீர்கள்.இவ்வாறான உதவிகள் செய்கின்றமைக்கு மிக்க நன்றிகள் .
வாருங்கள் புத்தகத்தினுள் செல்வோம் .
அடுத்த பிரிவு : வாருங்கள் பூனைக்குடும்ப உறுப்பினர்களை சந்திப்போம்