புல்லறிவாண்மை
திருக்குறள் > நட்பியல்
- 841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
- இன்மையா வையா துலகு.
- 842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
- இல்லை பெறுவான் தவம்.
- 843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
- செறுவார்க்கும் செய்தல் அரிது.
- 844. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
- உடையம்யாம் என்னும் செருக்கு.
- 845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
- வல்லதூஉம் ஐயம் தரும்.
- 846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
- குற்றம் மறையா வழி.
- 847. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
- பெருமிறை தானே தனக்கு.
- 848. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
- போஒம் அளவுமோர் நோய்.
- 849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
- கண்டானாம் தான்கண்ட வாறு.
- 850. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
- அலகையா வைக்கப் படும்.