புலால் மறுத்தல்

திருக்குறள் > துறவறவியல்

251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
தன்னுடலை பெருக்கி கொள்ள பிற உயிரிகளை உண்பவரிடம் எப்படி அருள்(கருணை) நிலைத்திருக்கும்?


252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளை பேனி பாதுகாக்கதவரை பொருளுடையோர் என்பதில்லை, அருளும் நிலைப்பதில்லை பிற உயிரிகளை உண்பவரிடம்.


253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
பிற உயிரிகளை கொல்ல நினைப்பவரது நெஞ்சம்போல் நல்லவற்றை நினைக்காது பிற உயிரியின் உடல் உண்டோர் மனம்.


254. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
அருள் என்பது எவ்வுயிரையும் கொல்லாதிருப்பது, அருளற்றவை என்பது உயிரிகளை கொன்று உண்பது.


255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
ஊன் உண்ணாதவர்களால் தான் உலகில் உயிரிகள் நிலைத்துள்ளன.


256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
உண்பதற்காக உயிரிகளை யாரும் கொல்லாவிட்டால், உலகில் உண்பதற்காக யாரும் உயிரிகளை கொன்று விற்க மாட்டார்கள்.


257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
உண்ணாதிருக்க வேன்டும் பிற உயிரிகளை, அவ்வாறின்றி உண்பவர்கள் தங்கள் உண்பது பிறிதோர் உயிரின் உயிரற்ற உடலென்பதை உணர வேன்டும்.


258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
ஞானமுடைய உயர்ந்தவர்கள் பிறிதோர் உயிரின் உயிர் பிறிந்த உடலை உணவாக உண்ணமாட்டார்கள்.


259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
பல உயர்ந்த பொருட்களை தீயிலிட்டு வேண்டுவதை விட மிக நல்லது பிற உயிரிகளை கொன்று உண்ணாமலிருப்பது.


260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எல்லா உயிரிகளாலும் வணங்க தக்க சிறப்படையோர் உயிரிகளை கொல்லாதவர் மேலும் உணவாக ஊண் உண்ணாதவர்


"https://ta.wikibooks.org/w/index.php?title=புலால்_மறுத்தல்&oldid=9476" இலிருந்து மீள்விக்கப்பட்டது