புணர்ச்சி விதும்பல்
திருக்குறள் > கற்பியல்
- 1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
- கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
நினைத்த பொழுதிலும், கண்ட கணத்திலும், மகிழ்ச்சியை தரும் குணம், காதலுக்கு மட்டுமே உரித்தாகும். கள்ளுக்கு இல்லை.
- 1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
- காமம் நிறைய வரின்.
- 1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
- காணா தமையல கண்.
- 1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
- கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
- 1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
- பழிகாணேன் கண்ட இடத்து.
- 1286. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
- காணேன் தவறல் லவை.
- 1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
- பொய்த்தல் அறிந்தென் புலந்து.
- 1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
- கள்ளற்றே கள்வநின் மார்பு.
- 1289. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
- செவ்வி தலைப்படு வார்.
- 1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
- என்னினும் தான்விதுப் புற்று.