பிரிவாற்றாமை
திருக்குறள் > கற்பியல்
- 1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
- வல்வரவு வாழ்வார்க் குரை.
- 1152. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
- புன்கண் உடைத்தால் புணர்வு.
- 1153. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
- பிரிவோ ரிடத்துண்மை யான்.
- 1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
- தேறியார்க்கு உண்டோ தவறு.
- 1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
- நீங்கின் அரிதால் புணர்வு.
- 1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
- நல்குவர் என்னும் நசை.
- 1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
- இறைஇறவா நின்ற வளை.
- 1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
- இன்னாது இனியார்ப் பிரிவு.
- 1159. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
- விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
- 1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
- பின்இருந்து வாழ்வார் பலர்.