பண்புடைமை
திருக்குறள் > குடியியல்
- 991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
- பண்புடைமை என்னும் வழக்கு.
- 992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
- பண்புடைமை என்னும் வழக்கு.
- 993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
- பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
- 994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
- பண்புபா ராட்டும் உலகு.
- 995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
- பண்புள பாடறிவார் மாட்டு.
- 996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
- மண்புக்கு மாய்வது மன்.
- 997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
- மக்கட்பண்பு இல்லா தவர்.
- 998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
- பண்பாற்றார் ஆதல் கடை.
- 999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞhலம்
- பகலும்பாற் பட்டன்று இருள்.
- 1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
- கலந்தீமை யால்திரிந் தற்று.