படைமாட்சி
திருக்குறள் > படையியல்
- 761. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
- வெறுக்கையுள் எல்லாம் தலை.
- 762. உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
- தொல்படைக் கல்லால் அரிது.
- 763. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலப்பகை
- நாகம் உயிர்ப்பக் கெடும்.
- 764. அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
- வன்க ணதுவே படை.
- 765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
- ஆற்ற லதுவே படை.
- 766. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
- எனநான்கே ஏமம் படைக்கு.
- 767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
- போர்தாங்கும் தன்மை அறிந்து.
- 768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
- படைத்தகையால் பாடு பெறும்.
- 769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
- இல்லாயின் வெல்லும் படை.
- 770. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
- தலைமக்கள் இல்வழி இல்.