பசப்பு உறு பருவரல்
திருக்குறள் > கற்பியல்
- 1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
- பண்பியார்க்கு உரைக்கோ பிற.
- 1182. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
- மேனிமேல் ஊரும் பசப்பு.
- 1183. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
- நோயும் பசலையும் தந்து.
- 1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
- கள்ளம் பிறவோ பசப்பு.
- 1185. உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
- மேனி பசப்பூர் வது.
- 1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
- முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
- 1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
- அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
- 1188. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
- துறந்தார் அவர்என்பார் இல்.
- 1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
- நன்னிலையர் ஆவர் எனின்.
- 1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
- நல்காமை தூற்றார் எனின்.