நெஞ்சொடு புலத்தல்
திருக்குறள் > கற்பியல்
- 1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
- நீஎமக்கு ஆகா தது.
- 1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
- செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
- 1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
- பெட்டாங்கு அவர்பின் செலல்.
- 1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
- துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
- 1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
- அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
- 1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
- தினிய இருந்ததென் நெஞ்சு.
- 1297. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
- மாணா மடநெஞ்சிற் பட்டு.
- 1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
- உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
- 1299. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
- நெஞ்சந் துணையல் வழி.
- 1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
- நெஞ்சம் தமரல் வழி.