நிறை அழிதல்
திருக்குறள் > கற்பியல்
- 1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
- நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
- 1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
- யாமத்தும் ஆளும் தொழில்.
- 1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
- தும்மல்போல் தோன்றி விடும்.
- 1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
- மறையிறந்து மன்று படும்.
- 1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
- உற்றார் அறிவதொன்று அன்று.
- 1256. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
- எற்றென்னை உற்ற துயர்.
- 1257. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
- பேணியார் பெட்ப செயின்.
- 1258. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
- பெண்மை உடைக்கும் படை.
- 1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
- கலத்தல் உறுவது கண்டு.
- 1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
- புணர்ந்தூடி நிற்பேம் எனல்.