நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் > கற்பியல்
- 1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
- கள்ளினும் காமம் இனிது.
- 1202. எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
- நினைப்ப வருவதொன்று ஏல்.
- 1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
- சினைப்பது போன்று கெடும்.
- 1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
- ஓஒ உளரே அவர்.
- 1205. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
- எம்நெஞ்சத்து ஓவா வரல்.
- 1206. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
- உற்றநாள் உள்ள உளேன்.
- 1207. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
- உள்ளினும் உள்ளம் சுடும்.
- 1208. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
- காதலர் செய்யும் சிறப்பு.
- 1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
- அளியின்மை ஆற்ற நினைந்து.
- 1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
- படாஅதி வாழி மதி.