நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/4ம் திருமொழி
--வெ.ராமன் 08:13, 2 ஜூலை 2006 (UTC)
திருவேங்கடமுடையான் தரவு கொச்சகக் கலிப்பா ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்* ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்* கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து* கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1 ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ* வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்* தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்* மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2 பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்* துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்* மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்* பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே. 3 ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்* கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு* பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து* செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே. 4 கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து* இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்* எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்* தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5 மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்* அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்* தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்* அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே. 6 வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்* தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்* கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7 பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்* முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்* வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்* நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8 செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!* நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்* அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்* படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 9 உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன் அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்* செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்* எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே. 10 மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்* பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி* கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன* பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே. 11 குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்