நாண் உடைமை
திருக்குறள் > குடியியல்
- 1011. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
- நல்லவர் நாணுப் பிற.
- 1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
- நாணுடைமை மாந்தர் சிறப்பு.
- 1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
- நன்மை குறித்தது சால்பு.
- 1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
- பிணிஅன்றோ பீடு நடை.
- 1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
- உறைபதி என்னும் உலகு.
- 1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
- பேணலர் மேலா யவர்.
- 1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
- நாண்துறவார் நாணாள் பவர்.
- 1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
- அறம்நாணத் தக்கது உடைத்து.
- 1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
- நாணின்மை நின்றக் கடை.
- 1020. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
- நாணால் உயிர்மருட்டி அற்று.