நாடு
திருக்குறள் > அரணியல்
- 731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
- செல்வரும் சேர்வது நாடு.
- 732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
- ஆற்ற விளைவது நாடு.
- 733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
- இறையொருங்கு நேர்வது நாடு.
- 734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
- சேரா தியல்வது நாடு.
- 735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
- கொல்குறும்பும் இல்லது நாடு.
- 736. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
- நாடென்ப நாட்டின் தலை.
- 737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
- வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
- 738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
- அணியென்ப நாட்டிவ் வைந்து.
- 739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
- நாட வளந்தரு நாடு
- 740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
- வேந்தமை வில்லாத நாடு.