நல்குரவு
திருக்குறள் > குடியியல்
- 1041. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
- இன்மையே இன்னா தது.
- 1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்
- இம்மையும் இன்றி வரும்.
- 1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
- நல்குரவு என்னும் நசை.
- 1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
- சொற்பிறக்கும் சோர்வு தரும்.
- 1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
- துன்பங்கள் சென்று படும்.
- 1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
- சொற்பொருள் சோர்வு படும்.
- 1047. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
- பிறன்போல நோக்கப் படும்.
- 1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
- கொன்றது போலும் நிரப்பு.
- 1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
- யாதொன்றும் கண்பாடு அரிது.
- 1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
- உப்பிற்கும் காடிக்கும் கூற்று.