நட்பு
திருக்குறள் > நட்பியல்
- 781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
- வினைக்கரிய யாவுள காப்பு.
- 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
- பின்னீர பேதையார் நட்பு.
- 783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
- பண்புடை யாளர் தொடர்பு.
- 784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
- மேற்சென்று இடித்தற் பொருட்டு.
- 785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
- நட்பாங் கிழமை தரும்.
- 786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
- அகநக நட்பது நட்பு.
- 787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
- அல்லல் உழப்பதாம் நட்பு.
- 788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
- இடுக்கண் களைவதாம் நட்பு.
- 789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
- ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
- 790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
- புனையினும் புல்லென்னும் நட்பு.