தொல்காப்பியம் பைத்தான்வழி உரை

தொல்காப்பியத்தைப் பைத்தான் தொழில்நுட்பத்தோடு கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இந்தப் பாடம் ஒரு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது. அப்படி என்ன அனுபவம் எனும் எண்ணம் உருவாகின்றதா? அது தொழில்நுட்ப முறையிலான விளக்கமாகும். அது என்ன தொழில்நுட்ப விளக்கம் என்ற வினா எழுகின்றதா? அது மனித மொழியைப் போன்று கணினி மொழியாகிய பைத்தான் அடிப்படையிலான விளக்கமாகும். இப்படி விளக்குவதனால் என்ன நடக்கும். தொல்காப்பிய விதிகளை மையமிட்ட தொழில்நுட்பம் உருவாகும். தட்டச்சுப் பிழைகளைச் சரிசெய்யும் நுட்பம் இன்னும் பொலிவுறும். இக்கால மாணவர்கள் மொழியைப் பிழையுடன் எழுதி வருவது பெரும் மன வருத்தைத் தருகின்றது. அதுவும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உயிர், மெய், குறில், நெடில் எழுத்துக்களைக்கூட அவர்கள் கற்காமல் உயர்கல்வி வரை வந்திருக்கின்றனர். இது போன்ற நிலைகளை ஓரளவிற்கு எதிர்காலத்தில் குறைத்திட இது போன்ற கற்றலும் தேவைப்படும். தொழில்நுட்ப மேம்பாட்டில் விளையாட்டுக் குறுஞ்செயலிகள் உருவாக்கவும் இந்தக் கற்றல் மிக முக்கியமானதே. ஆகையால் இந்தக் கட்டுரை அதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. அதுமட்டுமின்றித் தொல்காப்பிய இலக்கணம் கணினி மொழிக்கு ஏற்ப எழுதப்பெற்றிருக்கும் சிறப்பையும் காணலாம்.

உள்ளடக்கம்

தொகு

தொல்காப்பியம் பொது ஊழி ஆண்டிற்கு முன்பு 14இல் எழுதப்பெற்றதாக க.நெடுஞ்செழியன் [1]கூறியுள்ளார். இதனை எழுதியவர் தொல்காப்பியர். இவர் தொல்காப்பியத்தை மூன்று அதிகாரங்களாகக் கட்டமைத்துள்ளார். பேரா. க. பாலசுப்பிரமணியன் தொல்காப்பியம் [2] [3]எனும் இலக்கண நூல் முழுமையும் ஒருவரால்தான் எழுதப்பெற்றது என்றும், அதுவும் தமிழ்மொழியின் கட்டமைப்பைக் கூறும் இலக்கண நூல் என்றும் கூறியுள்ளமை கூர்ந்து நோக்கத்தக்கது. ஆகையால் தொல்காப்பிய இலக்கணத்தின் மூன்று அதிகாரங்களையும் கணினி மொழி அடிப்படையிலான விளக்கம் அளிக்கப்பெறும்பொழுது அதன் சிறப்பு மட்டுமின்றித் தமிழ்மொழிக்கான தொழில்நுட்பக் கருவிகள் அதிகம் உருவாகவும் வழிவகுக்கும் என்பதைத் தொடர்ந்து சில [4] ஆய்வுகளில் வலியுறுத்தி வரப்பெறுகின்றமையும் இங்குக் கூறுதல் தகும். பேரா.ந.தெய்வசுந்தரம், கணினி மொழியியல் அடிப்படையில் தொல்காப்பியத்தின் சிறப்பை இன்னும் தெளிவுப்படுத்தியுள்ளார் [5].

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களால் ஆனது. அவை,

  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்

என்பனவாகும். இவற்றுள், எழுத்ததிகாரம்,

  1. நூன்மரபு
  2. மொழிமரபு
  3. பிறப்பியல்
  4. புணரியல்
  5. தொகைமரபு
  6. உருபியல்
  7. உயிர் மயங்கியல்
  8. புள்ளி மயங்கியல்
  9. குற்றியலுகரப் புணரியல்

ஆகிய ஒன்பது இயல்களால் கட்டமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள், நூன்மரபு எழுத்ததிகாரத்தின் முதல் இயலாக அமைந்துள்ளது. இந்த இயல் தமிழ் மொழியமைப்பைப் பேசும் தொடக்கப்புள்ளியாகும். ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்க எடுக்கும் முதல் அளவுகோல் எழுத்தறிமுகமாக இருக்குமல்லவா? அதுபோல் தொல்காப்பியர் நூன்மரபு எனும் இயலை அமைத்துள்ளார். இங்குப் புலியூர்க் கேசிகனின் உரை அமைப்பில் உள்ளமை போன்று,

  1. எழுத்தின் வகை
  2. மாத்திரை
  3. எண்
  4. வடிவம்
  5. மெய்ம்மயக்கம்
  6. பிற மரபுகள்

ஆகிய ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கமாக அறிவோம்.


தொல்காப்பிய நூன்மரபுப் பகுதிகளை இன்னும் பைத்தான் கணினி அடிப்படையில் எழுதவும் புரிந்துகொள்ளவும் திறமூலத் தமிழ் நூலகத்தை நிறுவும் செயல்பாட்டை முதலில் அறிவோம். அப்பொழுதுதான் பைத்தான் மொழியில் எழுதி, பிரிக்க, வேறு செயல்பாட்டைச் செய்துபார்க்க முடியும். ஆகவே முதலில் அது பற்றிப் பார்ப்போம். !pip install Open-Tamil ஐயா, இது என்ன? இதனைக் கொஞ்சம் விளக்குங்கள். !pip install Open-Tamil [8] என்ற குறியீடு, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நூலகத்தை உங்கள் கணினியில் நிறுவுகிறது. இந்த நூலகம், தமிழ் எழுத்துக்களை உருவாக்க, படிக்க, எழுத, செயலாக்கத் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் வழங்குகிறது. இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகத்தை நிறுவலாம். பின்னர், இந்த நூலகத்தைப் பயன்படுத்தி, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட குறியீட்டை எழுதலாம். இந்தக் குறியீட்டை உங்கள் கணினியில் நிறுவ, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்: உங்கள் கணினியில் ஒரு கட்டளைப் பதிவு நிரலாக்கியைத் திறக்கவும். !pip install Open-Tamil என்ற குறியீட்டை உள்ளிடவும். Enter விசை அழுத்தவும். இந்தக் குறியீட்டை நிறுவிய பின்னர், உங்கள் கணினியில் Open-Tamil என்ற நூலகம் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

படம் - 1, பைத்தான் - !pip install Open-Tamil சரி ஐயா, நிறுவி விட்டேன்.

  1. -*- coding: utf-8 -*-

ஐயா, இது எதற்கு?

  1. -- coding: utf-8 -- என்ற குறியீடு, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டுத் தொகுப்பு ஆகும். இது, பைத்தான் மொழியில் பயன்படுத்தப்படும் அனைத்து எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்களுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் என்பதை அறிவிக்கிறது. இது, பைத்தான் மொழியின் வார்த்தைகளையும் கட்டளைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்படுவதற்கு உதவுகிறது.

import tamil ஐயா, இது என்ன? import tamil என்ற குறியீடு, பைத்தான் மொழியில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நூலகத்தை இறக்குமதி செய்கிறது. இந்த நூலகம், தமிழ் எழுத்துக்களை உருவாக்க, படிக்க, எழுத, செயலாக்கத் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் வழங்குகிறது.


மேற்கோள்கள்

தொகு
  1. நெடுஞ்செழியன் க., தொல்காப்பியர் காலம், https://newindian.activeboard.com/t59991225/topic-59991225/, last accessed 2023/10//14
  2. பாலசுப்பிரமணியன் க., தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, (2015)
  3. பாலசுப்பிரமணியன் க., தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு, சென்னை, (2017)
  4. தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)
  5. தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)

வார்ப்புரு:Reflist