தெரிந்து செயல்வகை
திருக்குறள் > அரசியல்
- 461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
- ஊதியமும் சூழ்ந்து செயல்.
- 462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
- அரும்பொருள் யாதொன்றும் இல்.
- 463. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
- ஊக்கார் அறிவுடை யார்.
- 464. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
- ஏதப்பாடு அஞ்சு பவர்.
- 465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
- பாத்திப் படுப்பதோ ராறு.
- 466. செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
- செய்யாமை யானுங் கெடும்.
- 467. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
- எண்ணுவம் என்பது இழுக்கு.
- 468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
- போற்றினும் பொத்துப் படும்.
- 469. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
- பண்பறிந் தாற்றாக் கடை.
- 470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
- கொள்ளாத கொள்ளாது உலகு.