தீ நட்பு
திருக்குறள் > நட்பியல்
- 811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
- பெருகலிற் குன்றல் இனிது.
- 812. உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
- பெறினும் இழப்பினும் என்?
- 813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
- கொள்வாரும் கள்வரும் நேர்.
- 814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
- தமரின் தனிமை தலை.
- 815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
- எய்தலின் எய்தாமை நன்று.
- 816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
- ஏதின்மை கோடி உறும்.
- 817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
- பத்தடுத்த கோடி உறும்.
- 818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
- சொல்லாடார் சோர விடல்.
- 819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
- சொல்வேறு பட்டார் தொடர்பு.
- 820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
- மன்றில் பழிப்பார் தொடர்பு.